லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து ஷிவ்பால் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். அகிலேஷ் யாதவ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலுக்குப் போட்டியாக அவரது மகன் அகிலேஷ் யாதவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதனால் கட்சியில் மோதல் வெடித்தது.
இதையடுத்து ஒழுங்கீனமாக செயல்படுவதாக கூறி கட்சி தலைமை அகிலேஷை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக அறிவித்தது. இதையடுத்து அகிலேஷ் தனது ஆதரவு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் கட்சி உடையும் நிலை ஏற்பட்டதால், அகிலேஷ் மீதான சஸ்பென்ட் நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்த சமாஜ்வாடி கட்சி அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டது. இதனை அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஷிவ்பால் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் தீர்ந்துவிட்டதாகவும் அகிலேஷ் கட்சி தலைமையுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று கட்சியின் மாநாட்டை திடீரென கூட்டினார் அகிலேஷ் யாதவ். இதற்கு முலாயம் சிங் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கூட்டக் கூடாது என்று எச்சரித்தார். ஆனால் தடையை மீறி அகிலேஷ் யாதவ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்ற செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து ஷிவ்பால் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் முலாயம் சிங்குக்கு நெருக்கமான அமர்சிங் கட்சியிலிருந்து வெறியேற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைமையின் தடையை மீறி அகிலேஷ் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்தியதற்கு முலாயம் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அகிலேஷ் நடத்திய மாநாடு சட்ட விரோதமானது என்றும் முலாயம் சிங் கூறியுள்ளார். பிரச்சனை தீர்ந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் அகிலேஷ் தரப்பால் ஷிவ்பால் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த உச்சக்கட்ட மோதலால் உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.