சென்னை: தலைவா படத்தில் சத்யராஜ் மறைந்த பிறகு அவரது வாரிசாக அறிவிக்கப்படும் விஜய், அப்படியே அதே சிவப்புத் துண்டை எடுத்துப் போர்த்திக் கொண்டு வந்ததைப் போல இருந்தது, நேற்று சசிகலா அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்ததைப் பார்த்தபோது. சசிகலா முதல் முறையாக நேற்றுதான் வெளியுலகுக்கு உரையாற்றினார். அவரது குரலை நேற்றுதான் அதிமுகவினர் முதல் முறையாகக் கேட்டனர். ஒட்டுமொத்த மக்களுக்கும் கூட நேற்றுதான் சசிகலா குரலைக் கேட்கும் "பாக்கியம்" கிடைத்தது.
சினிமாவில் வருவது போலவே இருக்கிறது சசிகலாவின் "மேக்ஓவர்". ஒட்டுமொத்த மக்களும் கூட அடடா, ஒரு விஷயத்தைக் கூட விடாமல் அப்படியே ஜெயலலிதா மாதிரி எல்லாவற்றையும் "இமிட்டேட்" செய்கிறாரே சசிகலா என்றுதான் நேற்று முழுவதும் மாய்ந்து மாய்ந்து பேசினர். முகத்தை மட்டும்தான் ஜெயலலிதா போல மாற்றிக் கொள்ளவில்லை. மற்றபடி ஒரு விஷயத்தைக் கூட விடாமல் அப்படியே ஜெயலலிதா போலவே காப்பி அடித்துள்ளார் சசிகலா என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.
காதில் போடும் தோடு, ஜாக்கெட் டிசைன், கை விரல் மோதிரம், ஹேர்ஸ்டைல் என எதையும் விடவில்லை சசிகலா. எல்லாமே ஜெயலலிதாவை ஞாகப்படுத்தும் வகையிலேயே பார்த்துப் பார்த்து செய்துள்ளது சசிகலா தரப்பு. முன்பெல்லாம் உடையில் அவ்வளவு கவனமாக இருக்க மாட்டார். சிம்பிளாக உடுத்தி வருவார் சசிகலா. ஆனால் தற்போது புதுப் பதவி வந்து விட்டதால் கெட்டப்பையும் மாற்றி விட்டார். அவரது உடையலங்காரத்தைப் பார்த்தாலே அது புரியும்.
பல அதிமுக பிரமுகர்களுக்கு என்ன கவலை என்றால், அம்மா எப்போதுமே தனது பேச்சின்போது குட்டிக் கதை ஒன்றை சொல்வார் அல்லது சொல்லி முடிப்பார். ஆனால் சசிகலா அதில் நேற்று அதிமுக பிரமுகர்களை ஏமாற்றி விட்டார் என்பதுதான். அடுத்த முறை அதையும் பார்த்து சரி செய்துவிடுவார்கள் என நம்பலாம்!