இந்திய வர்த்தகச் சந்தை மட்டும் அல்லாது, உலகநாடுகளும் அதிரவைத்தது பிரதமர் மோடியின் நவம்பர் 8ஆம் தேதி பேச்சு. ஆம் இந்தியாவில் 85 சதவீதம் பணப்புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இனி செல்லாது, அது வெறும் காகிதம் என்று நவம்பர் 8ஆம் கூறினார் மோடி கூறினார். இதுமட்டும் அல்லாது அடுத்த 50 நாட்களுக்கு நாட்டில் பணத் தட்டுப்பாட்டைப் போக்கவும், பல வர்த்தகச் சிக்கல்களைத் தடுக்கவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கருப்ப பணத்தை ஒழிக்க, டிஜிட்டல் பொருளாதாரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த எனப் பல காரணங்களுக்காக இந்த நடவடிக்கையைக் கொண்டு வந்தார் மோடி.
இந்நிலையில் மோடி கூறிய 50 நாட்கள் காலம் டிசம்பர் 30ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை மீண்டும் மக்கள் மத்தியில் பேச வருவதாக மோடி கூறினார். இதனால் மோடி அடுத்த என்ன குண்டு போட போகிறார் என வணிகர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்தனர். ஆனால் மக்கள் பயந்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்புகள் ஏதுமில்லை என்றாலும் பல நன்மை அளிக்கும் அறிவிப்புகளை மோடி அறிவித்துள்ளது. அப்படி என்ன அறிவிப்பு.. யார்யாருக்கு என்னென்ன லாபம்..?
வைப்பு நிதி:
மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி திட்டத்தில் புதிய சலுகை
10 வருட முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதி திட்டத்தில் 7.5 லட்சம் வரையிலான வைப்பிற்கு 8 சதவீத நிரந்த வட்டி விகிதத்தை அளிக்கப்படும் என மோடி அறிவித்துள்ளார். இதன் வட்டித் தொகை மாதாமாதம் அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார் மோடி.
கர்ப்பிணி பெண்கள்:
இந்தியாவில் 650 மாவட்டங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் மற்றும் தடுப்பூசி தேவைகளைப் பூர்த்திச் செய்ய அவர்களின் வங்கி கணக்கில் 6000 ரூபாய் தொகை மத்திய அரசு டெப்பாசிட் செய்ய உள்ளது.
சிறு தொழில்:
இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளிலும் சிறு தொழில்களுக்கான ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடன் அளவுகள்:
சிறு தொழில்களுக்கான அதிகப்படியான கடன் அளவுகளை 1 கோடி ரூபாயில் இருந்து 2 கோடி ரூபாய் வரை உயர்த்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
வீட்டுக் கடன்:
இந்தியாவில் கிராமப்புறங்களில் வீடு கட்டுவதற்காக அளிக்கப்படும் கடன் தொகைக்கு வட்டி விகிதங்கள் தளர்த்தப்பட்டுள்ளது. 2 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 3 சதவீதம் வரை வட்டி விகிதங்களைத் தளர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகள்:
இந்தியாவில் அறுவடை காலங்களில் விவசாயிகள் மாநில கூட்டுறவு மற்றும் சோசைடி வங்கிகளில் பெரும் 60 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட கடனுக்கான வட்டி தொகை இனி மத்திய அரசு செலுத்தும். 60 நாட்களுக்கு உண்டான வட்டியை மட்டுமே மத்திய அரசு செலுத்தும்.
வீடு வாங்கும் திட்டம்...:
பிரதான் மத்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் வீடு வாங்கக் கடன் பெறும் மக்களுக்கு வட்டி விகிதத்தில் அதிகளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளர்வுகள் 2017ஆம் ஆண்டில் கடன் பெறுவோருக்கு மட்டுமே. இதன் படி 9 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெறுவோருக்கு 4 சதவீதம் வரையில் தளர்வும், 12 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு 3 சதவீத தளர்வுகளும் அளிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.
இப்போ சொல்லுங்க மோடியில் டிசம்பர் 31ஆம் தேதி பேச்சு எப்படி இருந்தது என்று.?