சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை நியமித்ததை எதிர்த்து சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு அளிக்கிறது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலராகியுள்ளார் சசிகலா நடராஜன். முன்னதாக அதிமுகவின் சட்ட விதிகளின்படி கட்சி உறுப்பினராக 5 ஆண்டுகாலம் தொடர்ந்து நீடிக்காதவர் சசிகலா நடராஜன்; ஆகையால் சசிகலா அதிமுக பொதுச்செயலராக முடியாது என ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் தீர்ப்பை ஒத்திவைத்தார். இதனிடையே கடந்த மாதம் 28-ந் தேதி அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விண்ணப்பம் வாங்க லிங்கேஸ்வரன், அக்கட்சி தலைமை அலுவலகம் சென்றிருந்தார். அப்போது சசிகலா ஆதரவாளர்கள் அவரை கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கடந்த மாதம் 29-ந் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் சசிகலா அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 31-ந் தேதி அதிமுக பொதுச்செயலராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கில் இன்று மாலை நீதிபதி கல்யாணசுந்தரம் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.