நாகை: காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று காலை மேலும் 2 விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் பயிர்கள் கருகியதால் பலியான விவசாயிகளின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழக அரசு விவசாயிகளின் உயிரிழப்பு குறித்து வாயே திறக்காமல் இருப்பது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் காவிரியில் இருந்து நீர் கிடைக்காமலும், இயற்கையாக பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை சரியாக பெய்யவில்லை என்பதாலும் விவசாயிகள் தொடர்ந்து மரணம் அடைந்து வருகின்றனர். விவசாயம் பொய்த்துப் போனால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகிவிட்டது. பயிர்கள் காய்ந்த அதிர்ச்சியில் மாரடைப்பிலும் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதுவரை விவசாயிகளின் மரணம் குறித்தோ, அவர்களுக்கான இழப்பீடு குறித்தோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இன்னும் அதுகுறித்து ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
விவசாயி தம்புசாமி பலி:
இந்நிலையில், நாகையில் உள்ள மேலகாவலக்குடி என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். விவசாயி தம்புசாமி, இன்று காலை தான் பயிரிட்ட நிலத்திற்கு வழக்கம் போல் சென்றுள்ளார். அங்கு பயிர்கள் நீரின்றி வாடிக்கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சுருண்டு விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லையே என்று உறவினர்கள் சென்று பார்த்த போது, அவர் வயலிலேயே மரணம் அடைந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.
நாகையில் 33 பேர் உயிரிழப்பு:
பயிர்கள் கருகியதால் நாகை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 33 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த இரண்டு நாட்களில் மட்டும் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். நாகையில் தொடர்ந்து உயிர் பலி அதிகரித்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
திருவாரூர் பலி:
திருவாரூர் மாவட்டம் புத்தகலுர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வடமலை. இவரும் இன்று காலை வயலுக்கு வழக்கம் போல் சென்றிருக்கிறார். அங்கு பயிர்கள் கருகி கிடப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலே விவசாயி வடமலையும் மரணம் அடைந்துள்ளார். இந்த மரணத்தை சேர்த்து திருவாரூரில் இதுவரை 12 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
உயிர் பலி 66ஆக உயர்வு:
விவசாயம் பொய்த்துப் போனதால், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இதுவரை 66 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு நாட்களில் மட்டும் 11 பேர் நாகை மாவட்டத்தில் இறந்துள்ளனர். எல்லோரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த போது டிசம்பர் 31ம் தேதி மட்டும் 9 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். இன்று காலையில் மட்டும் 2 பேர் அதிர்ச்சி மரணம் அடைந்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் போராட்டம்:
தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், அதிர்ச்சி மரணங்கள் ஏற்படுவதும் என தினம் தினம் விவசாயிகளின் உயிர் பலி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதனைக் கண்டித்து திமுக நாளை போராட்டம் நடத்த உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
வாய் திறக்காத தமிழக அரசு:
இன்று வரை கணக்கில் தெரிந்து 66 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். கணக்கில் வராத இறப்புகள் இன்னும் எத்தனை என்பது தெரியவில்லை. ஆனால் விவசாயிகளின் இறப்பு குறித்தோ, அவர்களுக்கான இழப்பீடு குறித்தோ, பாதிப்புகள் குறித்தோ இன்னும் தமிழக அரசு வாய் திறக்காமலேயே உள்ளது. இதுவரை ஜெயலலிதாவிற்கு உடல் நலம் இல்லை என்றும் அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்றும் மவுனம் காத்த தமிழக அரசு இப்போது ஏன் அமைதி காக்கிறது என்பது புரியவில்லை என்கிறார்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.