டெல்லி: உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுவரும் அரசியல் நாடகங்கள் முன்பு கர்நாடகாவில் தேவகவுடாவுக்கும் அவரது மகன் குமாரசாமிக்கும் நடுவேயான பனிப்போரை நினைவுகூர்வதாக உள்ளன. இப்படித்தான் குமாரசாமிக்கு பதவியை விட்டுத்தந்தார் தேவகவுடா. குமாரசாமிக்கும் அவரின் அண்ணன் ரேவண்ணாவுக்குமிடையே மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை யார் முழுமையாக நிர்வகிப்பது என்பதில் மோதல் இருந்தது.
பாஜகவுடன் கூட்டு:
ஆனால், குமாரசாமிதான், ரேவண்ணாவைவிட திறமையாக கட்சியை நடத்துவார் என்ற அபிப்ராயம் தேவகவுடாவுக்கு இருந்தது. இதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. இந்நிலையில் திடீரென, பாஜகவோடு, மதசார்பற்ற ஜனதாதளத்தை கூட்டணி அமைத்து முதல்வரானார் குமாரசாமி. இதன் மூலம், கட்சியில் பெரிய அந்தஸ்து குமாரசாமிக்கு கிடைத்தது.
தேவகவுடா கோபம்:
இதையடுத்து தேவகவுடா தனது மகனிடம் பேசாமல் இருந்தார். பாஜக ஒரு மதவாத கட்சி என்றும் அதோடு கூட்டணி வைத்தது தவறு என்றும் தேவகவுடா மேடைகளில் பேசி வந்த நிலையில், குமாரசாமியோ முதல்வராக வலம் வந்தார். இதன்பிறகு ஒருநாள் கண்கள் பனித்தது. தந்தையும், மகனும் இணைந்து கொண்டனர்.
நாடகம்:
இதேபோலத்தான் சமாஜ்வாதி கட்சியில் தனது மகன் அகிலேஷ் யாதவுக்கு அதிகாரத்தை கொடுக்க, முலாயம் சிங் யாதவ் நாடகம் ஆடுவதாக ஒரு பேச்சு நிலவுகிறது. இதற்கு முலாயம் சகோதரர் சிவ்பால் யாதவுக்கு கட்சியில் ஆதரவு பெருகுவதே காரணம்.
ஆதரவு:
அகிலேஷை கட்சியிலிருந்து நீக்கியதன் மூலம் அவருக்கு அனுதாபத்தை தேடி தந்து கட்சியினரை அவர் பின்னால் அணிவகுக்க முலாயம்சிங் வழி செய்துள்ளார் என்கிறார்கள். இதன் ஒருபகுதியாகத்தான், அகிலேஷ் யாதவ் தன்னையே அகில இந்திய சமாஜ்வாதி கட்சி தலைவராக அறிவித்துக் கொண்டார்.
மகிழ்ச்சி:
இதன்மூலம் முலாயம்சிங் யாதவ் மிக்க மகிழ்ச்சியடைந்திருப்பார். தனது சகோதரரிடம் கட்சி செல்லாமல் இருக்க அகிலேஷை வைத்து முலாயம் போட்ட நாடகமே இந்த அரசியல் நகர்வுகள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏனெனில் முழு நேர அரசியல்வாதியான முலாயம்சிங்கை பின்னாடியிருந்து யாரும் ஆட்டி வைத்திருக்க முடியாது என்பது அவர்கள் கருத்து.