தஞ்சாவூர்: பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்களும், மஞ்சள் பயிர்களும் கருகியதால் விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்குப் போட்டும் உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். ஊருக்கே உணவு படைக்கும் உழவர்கள் வாழ்வதற்கு வழியின்றி தொடர்ச்சியாக மரணத்தை தழுவுவது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தலைகுனிவு. தமிழகத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 2500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறது புள்ளிவிபரம்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தற்கொலைகளுக்கு கடன் சுமைதான் காரணம் என்பதே உண்மை. கடலூர் மாவட்டம் ஆழங்காத்தான் கிராமத்தில் விவசாயி செந்தமிழன் மாரடைப்பால் உயிரிழந்தார். நாகை மாவட்டம் அறுபதாம்கட்டளையில் விவசாயி தம்புசாமி மாரடைப்பால் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் புத்தகலூர் கிராமத்தில் விவசாயி வடமலை மாரடைப்பால் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பத்தில் விவசாயி மண்ணு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கழுதி அருகே வாகைகுளத்தில் விவசாயி அழகர்சாமி, பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் உயிரிழந்த விவசாயிகள் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 68 விவசாயிகள் பலியாகியுள்ளனர் என்பதுதான் உச்சக்கட்ட சோகம்.