சென்னை: அதிமுகவை வைத்துத்தான் ஜெயலலிதாவை மக்கள் ஏற்றார்கள் என்று அக்கட்சி கொள்கை பரப்பு செயலாளரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். அம்மாதான் எல்லாம், மற்றதெல்லாம் சும்மா என்று இருந்து வந்த அதிமுக கட்சிகள் இப்போது ஜெயலலிதாவை மட்டம் தட்டும் வகையிலான பேச்சுக்களே அதிகம் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.
ஜெயலலிதா மறைந்ததுமே, இந்த முனுமுனுப்புகள் சத்தமாக கேட்கத் தொடங்கின. சசிகலாதான், ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிக்கு காரணம் என்று பொன்னையன் கூறியதன் மூலம், இந்த கோஷம் அதிகாரப்பூர்வ அந்தஸ்தை பெறத் தொடங்கியது.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இந்த வார்த்தையை எந்த நிர்வாகியும் கனவிலும் நினைத்து பார்த்திருக்க முடியாது. ஆனால் அவர் மறைந்து ஒரு வாரத்திற்குள் இப்படியெல்லாம் அக்கட்சி நிர்வாகிகளால் பேச முடிந்ததை அக்கட்சி அடிமட்ட தொண்டர்கள் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். இதன் உச்சமாக, இப்போது, தம்பிதுரை என்னவென்றால், அதிமுகவை வைத்துதான் ஜெயலலிதாவை மக்கள் ஏற்றார்கள் என கூறி அடுத்த குண்டை கொளுத்திப் போட்டுள்ளார்.
அதிமுகவை வைத்து என்று எந்த அடிப்படையில் தம்பிதுரை கூறுகிறாரோ தெரியாது. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்க வழிவகுத்த பொதுத் தேர்தலின்போது, ராஜிவ்காந்தி கொலை சம்பவத்தால் திமுகவுக்கு எதிராக கொந்தளிப்பு ஏற்பட்டது. அதை அதிமுக அறுவடை செய்து பெரும் வெற்றி பெற்றது. ஆனால் பிறகு அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் எப்போதாவது ஒருமுறை நினைவு கூறப்பட்டாரே தவிர, முழுமையாக இல்லை. ஜெயலலிதாவிற்கு உருவாக்கப்பட்ட பிம்பம், அவரது பேச்சு திறமை, எதிர்க்கட்சிகளின் வலிமை குறைவு போன்றவற்றை பயன்படுத்தியே ஜெயலலிதாவை மக்கள் ஏற்கத் தொடங்கினர். ஆனால் சசிகலாவை முதல்வராக்கும் நோக்கத்தோடு, ஜெயலலிதாவை மட்டம் தட்டுகிறார் தம்பிதுரை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.