சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றுள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுள்ளார். இப்போது கட்சியையும், ஆட்சியையும் சசிகலாவே வழி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுவடைந்து வருகிறது.
லோக்சபா எம்.பியும், துணை சபாநாயகருமான தம்பித்துரை முதல்கல்லை வீசி அதிர்வலையை உருவாக்கியிருக்கிறார். சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை தம்பிதுரை இன்று சந்தித்து பேசினார். தம்பிதுரையுடன் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, உதயகுமாரும் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, தொண்டர்களின் மனநிலையை ஏற்று சசிகலா விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வராக ஆட்சித் தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆட்சித் தலைமை ஒருவரிடமும், கட்சித் தலைமை ஒருவரிடமும் இருப்பது தமிழக மக்களுக்கு உகந்ததாக இல்லை. ஆட்சிப் பொறுப்பும், கட்சிப் பொறுப்பும் ஒன்றாக இருந்தால் தான் ஒருமித்த சிந்தனையுடன் செயல்பட முடியும் என்றும் தம்பித்துரை கூறினார். ஒ.பன்னீர் செல்வம் முதல்வராகவும்,. சசிகலா பொதுச்செயலாளராகவும் இருப்பதால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு
உத்தரபிரதேசத்தில் கட்சித்தலைவராக அப்பா முலயாம் சிங் யாதவ் இருக்கிறார். முதல்வராக அவரது மகன் அகிலேஷ் யாதவ் இருக்கிறார். ஆட்சித்தலைமையும், கட்சித்தலைமையும் தனித்தனியாக இருப்பதுதான் தற்போது அங்கே பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி உடைந்து போனதற்கு அதுதான் காரணம்.
அதிமுகவில் கட்சித்தலைமையும், ஆட்சித்தலைமையும் ஒருவரிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே கோரிக்கை என்றும் தம்பித்துரை தெரிவித்தார். அகிலேஷ் போல ஒபிஎஸ் பிரச்சினை செய்வார் என்று நினைத்து தம்பித்துரை கூறுகிறாரா என்று கேட்கின்றனர் திருவாளர் பொது ஜனங்கள்.