சென்னை: சசிகலா முதல்வராகும் நிலையில் அமைச்சரவையில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சரவையில் 2-வது இடம் கிடைக்கவே அதிக வாய்ப்புகள் எனவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து உடனே முதல்வராக சசிகலா முயற்சித்தார். ஆனால் மத்திய அரசு செக் வைத்து பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியது. இதில் மன்னார்குடி கோஷ்டி கடும் அதிருப்தி அடைந்தது. அப்போதே சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கயை அமைச்சர்கள் உதயகுமார் உள்ளிட்டோர் முன்வைத்தனர். ஆனால் டெல்லி மத்திய பாஜக அரசின் ஆதரவுடன் இருந்த ஓ பன்னீர்செல்வம் இதை விரும்பவில்லை. அவரை டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்திய மத்திய அரசு.
சசியை சந்திக்காத ஓபிஎஸ்:
டெல்லி பயணத்துக்குப் பின்னர் ஒரு வார காலம் சசிகலாவை போயஸ் கார்டனுக்கு போய் சந்திக்காமலே இருந்தார் ஓ. பன்னீர்செல்வம். இந்த இடைக்காலத்தில் டெல்லியுடன் சசிகலா தரப்பு சமாதானமாகப் போகிவிட்டது.
ஓபிஎஸ்-க்கு டோஸு:
இதையடுத்து பொதுக்குழுவுக்கு முந்தைய நாள் பன்னீர்செல்வத்தை கார்டனுக்கு அழைத்த மன்னார்குடி கோஷ்டி, இப்ப மத்திய அரசு எங்களுக்கு ஆதரவு; உங்களால் எதுவும் செய்ய முடியாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பியது. அதன்பின்னர் ஓ பன்னீர்செல்வம் பிடி தளரத் தொடங்கியது.
எந்த நேரத்திலும் ராஜினாமா:
சசிகலா பொதுச்செயலரான நிலையில் ஓபிஎஸ் பதவி விலக கோரும் கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் பன்னீர்செல்வம் பதவி விலகும் சூழல் இருக்கிறது.
இடம் கிடைக்குமா?:
அப்படி சசிகலா முதல்வரானால் மத்திய அரசு ஆதரவுடன் தங்களுக்கு எதிராக இருந்த பன்னீர்செல்வத்துக்கு அமைச்சரவையிலேயே இடம் தரக் கூடாது என நினைக்கிறதாம் மன்னார்குடி தரப்பு. அப்படியே அமைச்சரவையில் இடம்கொடுத்தாலும் 2-வது இடம் கண்டிப்பாக இல்லை என்பதில் உறுதியாக உள்ளதாம். தங்களது விசுவாசியான எடப்பாடி பழனிச்சாமிக்கே 2-வது இடம்தான் என்கிறதாம் மன்னார்குடி தரப்பு.
தொண்டர்களும் கொந்தளிப்பு?:
இதனால் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்பது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர். தொண்டர்களின் ஆதரவு முதலில் ஓபிஎஸ்-க்கு இருந்தபோதும் சசிகலாவை அவரும் ஏற்றுக் கொண்டதால் அவர்மீதும் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.