சென்னை: சசிகலா விரைவில் தமிழகத்தின் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று தம்பிதுரை கூறியுள்ளார். பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்மான நகலை கொண்டு வந்து போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலாவிடம் கொடுக்கும் போது, முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைத் தாண்டி ஓவரா பவ்யம் காட்டினார் தம்பிதுரை. கடந்த 5ம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு முதன்முறையாக 29ம் தேதி அதிமுகவின் பொதுக் குழு வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தை எடுத்துக் கொண்டு வானகரத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு பறந்தது முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு. அதில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் ஒருவர். கார் நேராக போயஸ் கார்டனை அடைந்ததும், பச்சைப் புடவையில் தயாராக இருந்த சசிகலாவை 5 குழு சந்தித்தது. தீர்மான நகலை முதலில் சசிகலாவிடம் வழங்கிய ஓ. பன்னீர்செல்வம் பவ்யமான குனிந்து அவரது காதருகில் "தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். நகலை கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் பொறுப்பை ஏற்க வேண்டும்" என்று மெதுவாக கூறினார்.
அப்போது அருகில் இருந்த தம்பிதுரை ஓ. பன்னீர்செல்வத்தை விட கூடுதலாக குனிந்து கொஞ்சம் சத்தமாக, பய பக்தியுடன், "சின்னம்மா, நீங்கள்தான் அம்மா வழியில் நின்று கட்சிப் பணியை செய்து எங்களை வழி நடத்த வேண்டும்" கெஞ்சினார். அப்போது அழுது கொண்டே இருந்த சசிகலா மிக லேசாக தலையசைத்தார். அந்த ஓவர் சீனில் ஓ. பன்னீர்செல்வம் மட்டுமல்ல, அங்கிருந்த பலரும் அசந்து போனார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது, சசிகலாதான் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று தம்பிதுரை அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் தம்பிதுரை.