சென்னை: தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னை தலைமைச் செயலகத்தின் இன்று சந்தித்து திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்பிற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
மீனவர்களுக்கு பாதிப்பில்லாமல் குளச்சல் துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் கூறியிருக்கிறோம். மேலும், துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் குறித்தும் முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரைக்குமான கிழக்கு கடற்கரைச் சாலைப் பணிகளை மத்திய அரசு ஏற்று நடத்த தயாராக இருக்கிறது என்பதை முதல்வரிடம் தெரிவித்திருக்கிறோம். இந்தச் சாலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, திட்டம் வேகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறேன். ஒருவேளை இதற்கு காலதாமதமாகும் என்றால் பாரத் மாதா என்ற மத்திய அரசின் திட்டத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலை அமையும் என்பதையும் எடுத்து சொல்லியிருக்கின்றோம். மேலும், தூத்துக்குடியில் இருக்கக் கூடிய நிலக்கரி இறக்குமதி சம்மந்தமான பிரச்சனைகள் குறித்துப் பேசப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் இருக்கக் கூடிய பல்வேறு நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றும் முதல்வரிடம் தெரிவித்திருக்கிறோம் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.