சென்னை: வறட்சியால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பம் ஒன்றுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் 100 நாள் வேலையை 200 நாளாக அதிகரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரியுள்ளார். வரும் 5ம் தேதி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்திற்கான ஆதரவை அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து பி. ஆர் பாண்டியன் திரட்டி வருகிறார். அந்த அடிப்படையில் இன்று திருமாவளவனை சந்தித்து பி.ஆர். பாண்டியன் ஆதரவு கேட்டார். இருவரின் சந்திப்பிற்கு பிறகு இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போராட்டத்திற்கு ஆதரவு:
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வரும் ஜனவரி 5ம் தேதி விவசாயிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிரணைப்புக் குழு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பி.ஆர் பாண்டியன் உள்ளிட்ட குழுவினர் கேட்டதற்கு இணங்க இந்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கிறது.
வறட்சி மாநிலம்:
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சியால் பாதிப்படைந்து மரணமடைந்துள்ளனர். 60 விழுக்காட்டுக்கு மேல் பருவமழை பொய்த்துப் போனாலே வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று அறிவிக்க வேண்டும். இந்த முறை 81 சதவீதத்திற்கு மேல் மழை பெய்யவில்லை. கடலூர் மாவட்டத்தில் 81 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்தில் 70 சதவீதத்திற்கு மேல் மழையில்லை. இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி:
அண்மையில் வர்தா புயலால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து கேட்டார். ஆனால் தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து தமிழக அரசு எதுவும் பேசவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக மத்திய அரசிற்கு உரிய அழுத்தத்தைத் தர வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.
25 லட்சம் இழப்பீடு:
வறட்சியால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும். பயிர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏக்கருக்கு 25 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் விவசாயக் கூலித் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் குடும்பம் ஒன்றுக்கு 5000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக அதிகரித்து அறிவிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு:
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தைக் காரணம் காட்டி காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை விசிக கண்டிக்கிறது. உச்ச நீதிமன்ற வழக்கை உடனடியாக முடித்து ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்த வேண்டும். அல்லது கொள்கை முடிவெடுத்து அதன் அடிப்படையிலாவது ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்.
புதுவையில் வறட்சி:
இந்த வறட்சியால் புதுச்சேரி மாநிலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. விசிகவின் முன்னணி பொறுப்பாளர்கள் புதுவை முதல்வர் நாராயணசாமியை இன்று சந்தித்தது. அப்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட யூனியன் பிரதேசமாக புதுவையை அறிவிக்க வேண்டும் என்றும், அதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று விசிக கோரியுள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.