சென்னை: ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி அலங்கால்லூர் வாடிவாசல் அருகே தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி வரும் 9 ஆம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டாவது நடைபெறுமா என்று, காளையை அடக்குகின்ற தமிழக இளைஞர்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மத்திய அமைச்சர், மாநில அமைச்சர்கள், இந்த ஆண்டு நடைபெறும் என்று அறிக்கைகள் மூலமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று தெரியவில்லை என மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.எனவே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வரும் 9ஆம் தேதி மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் காலை 10 மணியளவில், மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள், அனைவரும் கலந்துகொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.