டெல்லி: பூமியின் சுழற்சி வேகம் குறைந்திருப்பதால் அணு கடிகாரத்தில் ஜனவரி 1ம் தேதி ஒரு வினாடி கூடுதலாக சேர்க்கப்பட்டது.
டெல்லியிலுள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்திலுள்ள அணு கடிகாரத்தில் இந்த மாற்றம் சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டது. டிசம்பர் 31ம் தேதியான அன்று, இரவு 11.59 மணி 59 விநாடிகள் ஆனதும் புத்தாண்டு பிறந்ததாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அதோடு கூடுதலாக ஒரு விநாடி சேர்க்கப்பட்டு புத்தாண்டு பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
அறிவியல் காரணம்:
அதாவது 11 மணி 59 நிமிடங்கள், 60 விநாடிகளின்போதுதான் புத்தாண்டு பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கு பின்னணியில் அறிவியல் காரணம் உள்ளது. பூமியின் சுழலும் வேகம் சில புறக்காரணிகளால் மாறுபடுவது வழக்கம். அப்படி, பூமியின் சுழற்சி வேகம் குறைகிறபோது அதை ஈடுகட்ட கடிகாரத்தில் ஒரு விநாடி கூட்டப்படுவது வழக்கமான ஒன்று.
லீப் செகண்ட்:
இந்த வழக்கத்திற்கு 'லீப் செகண்ட்' என்று பெயராகும். 1972ம் ஆண்டு முதல் இந்த லீப் செகண்ட் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. 44 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், 27 முறை இதுபோன்ற விநாடி மாற்றும் நடைமுறை நடந்துள்ளது.
நேரத்தை மாற்ற வேண்டுமா?:
இப்படிப்பட்ட ஆண்டுகளில் நாம் நமது கடிகாரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழலாம். அதற்கான அவசியம் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தானாகவே நடக்கும்:
செல்போன், கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்கள், தானியங்கி முறையில் நேரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாம். கடிகாரம் போன்று நம்மால் மாற்றியமைக்கப்படும் பொருட்களுக்கு மாற்றம் தேவையில்லை. ஏனெனில் 1 வினாடி வேறுபாட்டில் பெரிய வித்தியாசம் நிகழ்ந்துவிடப் போவதில்லையல்லவா!