நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் வங்கி கணக்குகளில் அதிகளவில் டெப்பாசிட் செய்த ஆசாமிகளே உஷாரா இருங்க. மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இந்தியாவில் அமல்படுத்தி 50 நாட்கள் முழுமையாக முடிந்து வர்த்தகச் சந்தையும், நாட்டில் பணப் புழக்கமும் இயல்பு நிலை திருப்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், கருப்புப் பண ஆசாமிகளுக்கு வலைவீசத் திட்டமிட்டுள்ளது வருமான வரித்துறை
கடந்த 2 மாதங்களில் அதாவது நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் வங்கி கணக்கில் அதிகம் வைப்பு வைக்கப்பட்ட வங்கி கணக்குகள், அதன் உரிமையாளர்கள், அவர்களது பழைய வருமான வரி அறிக்கைகள் எனப் பல தகவல்களை டன் கணக்கில் சேகரித்துள்ளது.
இது எல்லாம் எதற்காக..?
வருமான வரித்துறை:
இந்தியாவில் கருப்பு பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் விதமாக மத்திய அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி.
இந்த நடவடிக்கையின் வாயிலாகக் கருப்ப பணம் வைத்துள்ளவர்களைக் கண்டறிய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
தகவல்கள் சேகரிப்பு:
இந்நிலையில் நாட்டில் பல வழிகளில் பல வங்கி கணக்குகளில் அளவிற்கு அதிகமாக வைப்புச் செய்யப்பட்ட கணக்குகள், கணக்கின் உரிமையாளர்கள், வருமான வரி தாக்கல் அறிக்கை எனப் பல தகவல்கள் மிகவும் ரகசியமான முறையில் சேகரிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல்:
2016-17ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் அறிக்கையை ஒப்பிடுகையில் சேகரிக்கப்பட்ட தகவல் ஒத்துப்போனால் எந்தப் பிரச்சனையும் இல்லை.ஏதேனும் வித்தியாசம் இருந்தால், இணையத்தளத்தில் பெயர் வெளியீட்டில் துவங்கி, ரெய்டு, சிறைத் தண்டனை, அபராதம் என அடுத்தடுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்த தயாராகி வருகிறது வருமான வரித்துறை.
டேட்டா அனலிட்டிக்ஸ்:
மேலும் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆய்வு செய்யப் பல ஆயிரம் ஊழியர்கள் தேவைப்பட்ட நிலையில், இப்பிரச்சனையைக் களைய உயர் தொழில்நுட்பமான டேட்டா அனலிட்டிக்ஸ்-ஐ பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாகக் கோடிக்கணக்கில் இருக்கும் தகவல்களைக் கூட நொடிப் பொழுதில் ஆய்வு செய்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கருப்பு பண ஆசாமிகளுக்குத் தண்டனை ஸ்பாடிலேயே கிடைத்துவிடும்.
பணமதிப்பிழப்பு:
மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்கள் மீது விதித்த தடை கருப்புப் பண ஆசாமிகள் இந்தியாவில் பல இடங்களில், பல வகைகளில் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாறினர்.
தற்போது அனைத்து வழிகளும் முடக்கப்பட்ட நிலையில், தவறு செய்தவர்களைப் பிடிக்கும் பணியில் வருமான வரித்துறையினர் இறங்கியுள்ளது.
குற்றவாளி:
புதிய முறையிலான ஆய்வைத் துவங்கியுள்ளோம், வருமான வரி அறிக்கை தாக்கலுக்கு முரண்பாடான வருவாய் இருந்தால், பான் கார்டு வாயிலாகத் தனிநபரை குற்றவாளி என அறிவிக்க உள்ளோம் என மத்திய நேரடி வரி அமைப்பின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
2.5 லட்சம் ரூபாய்:
இப்புதிய தொழில்நுட்பமான டேட்டா அனலிட்டிக்ஸ்-ஐ பயன்படுத்துவதன் மூலமாக வருமான வரித் துறை தேவைப்பட்டால் 2.5 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக வைப்பு செய்யப்பட்டவர்களும் வரம்பிற்குள் இணைக்கத் திட்டமிட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள்:
மேலும் டேட்டா அனலிட்டிக்ஸ் கொண்டு ஒருவரின் குடும்ப உறுப்பினர்களின் வருமான அவளவுகளையும், அதில் செய்யப்பட்டுள்ள குளறுபடிகளையும் முழுமையாகக் குறைக்க முடியும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதெப்படி சாத்தியம் என்றால், மொபைல் எண், விலாசம் ஆகியவை ஒத்துப்போகும் போது இக்கணக்குகளை இணைத்துக்கொள் முடியும். இதனை டேட்டா அனலிட்டிக்ஸ் வாயிலாக நொடிப்பொழுதில் செய்து விட முடியும்.
பம்பரமாய் வேலை:
நவம்பர் 9 முதல் டிசம்பர் 29 வரையிலான காலகட்டத்தில் வருமான வரித்துறையினர் 556 சர்வே, 245 தேடுதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 228 குற்றம்சாட்டப்பட்ட வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.