சென்னை: ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளன. சசிகலா புதிய பொதுச்செயலளாராக பதவியேற்றுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்களை குப்பையில் வீசியுள்ளனர். சிறந்த ஆளுமை, துணிச்சல் மிக்க பெண்மணி என்ற பெருமைக்கெல்லாம் பெயர் போனவர் மறைந்த முதல்வர் ஜெயலிதா. ஜெயலலிதா கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஜெயலலிதா அடிமட்ட தொண்டர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்ப்பவர் என கூறப்படுவதுண்டு. அவராலேயே பலர் இன்று அமைச்சர்களாகவும், எம்எல்ஏக்களாகவும் எம்பிக்களாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவை மறந்த நிர்வாகிகள்:
ஆனால் அவரால் அடையாளம் காட்டப்பட்ட பலர் இன்று அவரையே மறந்து சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து துதி பாடி வருகின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அவரது படம் போட்ட காலண்டர்களை அச்சிட்டு விநியோகிக்க அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போட்டி போடுவர்.
ஜெயலலிதா படம் போட்ட காலண்டர் ரத்து:
ஆனால் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால் அவரது படம் போட்டு சிவகாசியில், காலண்டர் தயாரிக்க ஆர்டர் கொடுத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களின் ஆர்டரை உடனடியாக ரத்து செய்தனர். மேலும் சசிகலா படத்துடன் காலண்டர் தயாரிக்கவும் அவர்கள் ஆர்டர் கொடுத்தனர். ஆர்டர் ரத்து செய்ய முடியாமல் போனதால் அவரது படம் போட்ட காலண்டர்கள் தற்போது கட்டுக்கட்டாக குப்பையில் வீசியெறியப்பட்டுள்ளன.
அடிமட்ட தொண்டர்கள் வேதனை
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்று அவரையே மறந்து அவரது படம் போட்ட காலண்டர்களை குப்பையில் வீசியுள்ளதாக அடிமட்டத் தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.