சென்னை: ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலா, அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்த நாற்காலிக்கு இடம் பெயரப் போகும அவருக்கு போட்டோஷூட் நடத்தி கும்பிட்டபடியும், சிரித்தபடியும், கையெழுத்து போடுவது போலவும் போஸ் கொடுக்க வைத்து போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர். சசிகலாவிற்கு கட்சியை வழி நடத்தும் தகுதி இருக்கிறதா? ஜெயலலிதா போல மக்களைக் கவரும் தன்மை இருக்கிறதா என்பது ஒருபக்கம் விவாதமாக உள்ளது. மறுபக்கம் அதிமுக தொண்டர்கள் என்னதான் நடக்குதுன்னு தெரியலையே என்ற பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல வசீகரம் மூலமாக மக்களைக் கவர்ந்து விட வேண்டும் என்று சசி தரப்பு முடிவெடுத்து களம் இறங்கியுள்ளது. இதற்காக ஒரு போட்டோஷூட்டையும் நடத்தி போட்டோக்களை ரிலீஸ் செய்துள்ளனர்.
இப்படித்தான் விஜயகாந்த்தும்!:
முன்பு இப்படித்தான் விஜயகாந்த்தும் செய்தார்.ச விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பின்னர் அவர் நடிகர் என்பதால் ரசிகர்களே தொண்டர்களாக மாறியதால் சிக்கல் இல்லை என்றாலும் அவர் முழு அரசியல்வாதியாக மாற கொஞ்சம் மெனக்கெட வேண்டியதாகவே இருந்தது. தேர்தல் நேரங்களில் விதவிதமாக போட்டோக்கள் எடுத்து போஸ்டர்களில் ஒட்டினார்கள்.
வாயில் பேனாவைக் கடித்தபடி:
வாயில் பேனாவைக் கடித்தபடியும், கும்பிட்டபடியும், சைடு போஸில் சிரித்தபடியும்., கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்திருப்பது போல என விதம் விதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்தனர்.
அதேபோல சசிகலா:
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டிற்குள் இருந்த சசிகலா, இப்போது பொது வெளியில் உலா வரத் தொடங்கியுள்ளார். "சின்ன அம்மா" என்று போஸ்டர் ஒட்டிய போதே, பலரும் கிழித்தார்கள். முகத்தை பார்க்க பிடிக்கவில்லை என்கிறார்கள் அதிமுகவின் பெண் தொண்டர்கள். இதனால் இப்போது தன்னை ஜெயலலிதா போல காட்டிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் சசிகலா.
சிரித்தபடி:
பொதுச்செயலாளராக பதவியேற்க வரும் போதே அவரது கெட் அப் மாறியிருந்தது. குளோஸ் நெக் ரவிக்கை, படிய வாரிய தலை, ஜெயலலிதா ஸ்டைல் கொண்டை, நாம பொட்டு என முற்றிலும் மாறினார் சசிகலா. ஆனால் அவரது புன்னகை மிஸ் ஆகியிருந்தது. இப்போது சிரித்தபடி போஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
ஸ்டார்ட் கேமரா ஆக்ஷேன்!:
இப்போது சசிகலாவிற்கு போட்டோ ஷூட் நடத்தியிருக்கின்றனர். கையெடுத்து கும்பிட்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். இவ்வளவு சிரித்தால் போதுமா? என்று கேட்காமல் கேட்கிறார் சசிகலா. ஜெயலலிதா போல சீட்டில் உட்கார்ந்து கையெழுத்து போடுவது போல ஒரு போஸ். கும்பிட்டபடி ஒரு போஸ்... !
மேக் அப் ரெடி:
ஜெயலலிதா மேக் அப் இல்லாமல் வெளியே வருவதில்லை. மரண தருவாயிலும் கூட அதே மேக் அப் மாறாமல் இருந்தார். ஆனால் சசிகலா அப்படியல்ல. பல நேரங்களில் மேக் அப் போடமாட்டார். இப்போது அவரும் மேக் அப் போடத் தொடங்கிவிட்டார்.