சென்னை: தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது.. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது.. இதுதான் அனைவரும் கேட்கும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த கேள்வியாக உள்ளது. என்ன வேண்டுமானாலும் இங்கு நடக்கலாம், கேட்க ஆளே கிடையாது, கேட்கவும் கூடாது என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு போய்க் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
ஒரு அரசியல் கட்சி என்றால் ஆயிரம் இருக்கும். அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் அதைத் தாண்டி வெளியே வரும்போதுதான் சர்ச்சை வெடிக்கிறது. அதிகார துஷ்பிரயோகம் நடக்கும்போதுதான் அது குறித்து அனைவரும் கேள்வி எழுப்பும் நிலை உருவாகிறது. ஜனநாயக நெறிமுறை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள் சில அதிமுக நிர்வாகிகள். குறிப்பாக லோக்சபா துணை சபாநாயகர் என்ற மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிற தம்பித்துரையின் செயல், அனைவரையும் அதிர வைத்துள்ளது.
லெட்டர்பேடில்:
இந்திய அரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட தம்பித்துரையின் லெட்டர் பேடிலேயே சசிகலாவுக்குக் கோரிக்கை விடுக்கும் கடிதத்தை அனுப்பியுள்ளார் தம்பித்துரை. இது எவ்வளவு பெரிய அப்பட்டமான விதி மீறல் என்பது அவருக்குப் புரியாமல் போனதுதான் பெரிய ஆச்சரியம்.
துணை சபாநாயகர் இப்படி செய்யலாமா
துணை சபாநாயகர் இப்படி செய்யலாமா
லோக்சபாவின் துணை சபாநாயகர் என்பவர் கட்சி சார்பற்றவர், பாரபட்சமாக இருக்க வேண்டியவர். ஆனால் அவரோ, "சின்னம்மா"வின் பேச்சு என்னை உருக்கி விட்டது என்று உருகித் துடித்துள்ளார் தனது கடிதத்தில். வார்த்தைக்கு வார்த்தை "சின்னம்மா"வைப் புகழ்ந்துள்ளார் "லோக்சபா துணை சபாநாயகர்".
முதல்வர் பதவி என்ன கிள்ளுக்கீரையா?:
அதை விடக் கொடுமை கடைசியில் முதல்வர் பதவியை உடனே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் முடித்திருப்பதுதான். அவர் ஓ.பன்னீர் செல்வத்தை சிறுமைப்படுத்தவில்லை. மாறாக, முதல்வர் பதவியை அசிங்கப்படுத்தி விட்டார். காமராஜர், அண்ணாவுக்கு அவமரியாதை
காமராஜர் போன்ற, அண்ணா போன்ற உயர்ந்த தலைவர்கள் வீற்றிருந்த பதவியை தம்பித்துரை ஜஸ்ட் லைக் தட் தூக்கி எறிந்து பேசி விட்டார் என்பதே உண்மை. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏக்களைக் கூட்டி நீக்கலாமே
முதல்வர் பதவியில் சசிகலாவை அமர வைக்க வேண்டும் என்றால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி அமைதியான முறையில் புதிய தலைவராக அவரைத் தேர்ந்தெடுக்கலாமே. அதை யார் கேட்கப் போகிறார்கள், தடுக்கப் போகிறார்கள். அதை விட்டு விட்டு எதற்காக பொது வெளியில் இப்படி லெட்டர் அனுப்புவது, போயஸ் கார்டனுக்குப் போவது, கோரிக்கை வைப்பது, காட்டமாக பேட்டி கொடுப்பது என்று முதல்வர் பதவியை களங்கப்படுத்தும் செயல்களில் தம்பித்துரை போன்றவர்கள் ஈடுபடுகிறார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள், ஆச்சரியப்படுகிறார்கள்.
பதவிக்கு அழகல்ல:
தம்பித்துரை சசிகலாவுக்குக் கோரிக்கை விடுப்பதாக இருந்தால் சாதாரண லெட்டர் பேடிலோ அல்லது வெள்ளைக் காகிதத்திலோ எழுதியோ அல்லது டைப் செய்தோ கோரிக்கை விடுத்திருக்கலாம். அதை விட்டு விட்டு லோக்சபா துணை சபாநாயகர் பதவிக்குரிய லெட்டர் பேடில் அவர் அனுப்பியது மிகப் பெரிய ஜனநாயக் கேலிக் கூத்தாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.