NewMember•••1
Dharani
Dharani
3/1/2017, 12:56 pm
ஒரு நிறுவனம் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தொழிலாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும். தலைமை நிர்வாக அதிகாரிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவு குடும்ப உறுப்பினர்கள் போன்று அக்கறையுடனும் அன்புடனும் இருந்தால் அந்த நிறுவனம் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாறிவிடும். அந்த வகையில் தொழிலாளர்களின் 90%க்கும் அதிகமான நன்மதிப்பைப் பெற்ற தலைமை நிர்வாக அதிகாரிகள்:

1. ஸ்காட் ஸ்செர் - அல்டிமேட் சாப்ட்வேர்:

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 02-1483364043-scotsocher

அல்டிமேட் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் ஸ்செர் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் 99% தொழிலாளர்களின் நன்மதிப்பைப் பெற்று உலகையே வியக்க வைத்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளில் 5வது இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. மார்க் ஜூக்கர்பெர்க் - ஃபேஸ்புக்

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 07-1-facebook-mark33-600

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் மார்க் ஜூக்கர்பெர்க், 2013,014, 2015 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தொடர்ந்து முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகள் பட்டியலில் உள்ளார். உலக அளவில் தொழிலாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்ற இவர் இரண்டாம் இடத்தைப் பெறுகிறார்.

3. ஜெஃப் வெய்னர் - லிங்க்ட் இன்

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 02-1483364132-linkedin-microsoft-jeff-weiners-email-to-linkedins-global-workforce

மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான லிங்க்ட் இன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் வெய்னர், 97% தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்று இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடம் போட்டு வெற்றி நடை போடுகிறார். கடந்த ஆண்டு இவர் 12வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


4. மார்க் பெனிஆஃப் - சேல்ஸ்ஃபோர்ஸ்:

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 02-1483364221-bxocdjgicaihvis

சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் பட்டியலில் 4வது இடத்தைப் பெற்றுள்ளவர் சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெனிஆஃப் என்பவர். இவர் 97% தொழிலாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் 13வது இடத்தில் இவர் இருந்தார் என்பதும், கடந்த ஆண்டு 21வது இடத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5. சுந்தர் பிச்சை - கூகுள்:

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 12-1439363340-1sundar-pichai

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் தமிழர் சுந்தர் பிச்சை தனது நிறுவனத்தில் உள்ள 96% தொழிலாளர்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் அவர் இந்த மிகப்பெரிய பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. டிம் குக் - ஆப்பிள்:

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 27-1427455816-1apple-tim-cook

உலகின் பெரும்பாலானவர்களை கவர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் டிம் குக், சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் பட்டியலில் 6வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார். இவருக்கு 96% தொழிலாளர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளிலும் நல்ல ரேட்டிங்கை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. ஜிம் ஒயிட்தர்ஸ்ட் - ரேதாட்:

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 02-1483366416-origin-caaea376a0f5ad4301a7a7d01f45cd01

உலகின் முன்னணி ஓப்பன்சோர்ஸ் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான ரேதாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஜிம் ஒயிட்தர்ஸ்ட் 7வது இடத்தைப் பெற்று சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்தப் பட்டியலில் முதன்முதலில் இடம்பெற்றுள்ள இவருக்கு 96% தொழிலாளர்கள் நன்மதிப்பை அளித்துள்ளனர்.

8. ஜான் லெக்ரி - டி-மொபைல்:

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 02-1483366464-origin-9dd8548435c06386ec3afbaad0f57d6b

கடந்த ஆண்டு சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த டி-மொபைல் தலைமை நிர்வாக அதிகாரி , ஜான் லெக்ரி இந்த ஆண்டு 8வது இடத்தைப் பிடித்து சாதனைச் செய்துள்ளார். இவருக்கு 95% தொழிலாளர்கள் நற்சான்று அளித்துள்ளனர்.

9. ஜேக் லிட்டில் - மேத்வொர்க்ஸ்:

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 02-1483366515-caz2z3sumaamzxt

95% தொழிலாளர்களின் நன்மதிப்பைப் பெற்று 9வது இடத்தில் உள்ள மேத்வொர்க்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி , ஜேக்லிட்டிலுலகின் மிகப்பெரிய கணித கணினி மென்பொருள் நிறுவனத்தை இயக்கி வருகிறார். இவருடைய தயாரிப்புகள் உலக புகழ்பெற்றவை.

10. சாந்தனு நாராயண் - அடோப்:

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 02-1483366573-shantanu-narayen-600x450-0-100516592-primary-idge

இந்தியாவைச் சேர்ந்த சாந்தனு நாராயண், அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார் கடந்த ஆண்டு 47வது இடத்தில் இருந்த இவர் 37 இடங்கள் முன்னேறி இந்த ஆண்டு 10வது இடத்தைக் கம்பீரமாக பிடித்துள்ளார்.

11. டாரா கோஸ்ராசாஹி - எக்ஸ்பெடியா:

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 02-1483366613-cydl0v6vaaa7hso

ஈரான் - அமெரிக்க தொழிலதிபரான டாரா கோஸ்ராசாஹி, எக்ஸ்பிடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வாக் இருந்து வருகிறார். இவர் தன்னுடைய நிறுவனத்தின் தொழிலாளர்களின் 95% நல்லாதரவை பெற்று வருகிறார்.

12. ஸ்பென்சர் ராஸ்கோப் - ஜில்லோ:

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 02-1483366657-cf9tkmnusaaputy

ஜில்லோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்பென்சர் ராஸ்கோ, இந்தப் பட்டியலில் 12வது இடத்தைப் பெற்றுள்ளார். இவருடைய நிறுவனத்தின் 94% தொழிலாளர்கள் இவருக்கு நன்மதிப்பு சான்றிதழை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜில்லோ நிறுவனம் உலகப்புகழ் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

13. ராமி ரஹிம் - ஜூபிடர் நெட்வொர்க்ஸ்:

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 02-1483366700-ciqnoopxeaaulwl

ஜூபிடர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வரும் ராமி ரஹிம், இந்தப் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார். இவருக்கு 94% தொழிலாளர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.

14. பில் மெக்டெர்மோட் - SAP:

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 02-1483366746-041913-sap-600

SAP நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ராம் இரஹிம் இந்தப் பட்டியலில் 14வது இடத்திஅ பிடித்துள்ளார். இவருக்கு 94% தொழிலாளர்களின் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

[b]15. அரோன் ஜெ. அய்ன் - க்ரோனோஸ் இன்கார்ப்பரேட்டட்:[b]

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..? 02-1483366842-cheenv2uuaasozb

க்ரோனோஸ் இன்கார்ப்பரேட்டட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அரோன் ஜெ. அய்ன், 95% தொழிலாளர்களின் நன்மதிப்பைப் பெற்று சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் 15வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிறுவனத்திற்கு உலகில் உள்ள 100 நாடுகளுக்கும் மேல் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CREATE NEW TOPIC



Information

2016ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த சிஇஓ யார்..?

From  » திரைக் கலைக்களஞ்சியம் » தமிழ் சினிமா களஞ்சியம்

Topic ID: 578

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...