சென்னை: ஓ பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக மோடியின் அரசு உதவியதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இது அவர்கள் கட்சியின் முடிவு. இதில் எங்கள் தலையீடு எதுவும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்ற முறையில் மத்திய அரசு உதவிகளைச் செய்து வருகிறது. ஓ.பன்னீர் செல்வம் 2 முறை ஜெயலலிதாவால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது ஜெயலலிதா இறந்த பிறகு அவர் பதவியேற்று இருக்கிறார். அதற்குள் அவரின் செயல்பாட்டை எப்படி கூற முடியும்," என்றார்.
சசிகலா முதல்வராக வேண்டும் என அமைச்சர்கள் சிலர் கூறி வருவது குறித்து கேட்டபோது, "யார் முதல்-அமைச்சராக இருக்க வேண்டும் என்பது அக்கட்சியின் முடிவு. இதில் நாங்கள் கருத்து சொல்ல முடியாது. இது உள்கட்சி விவகாரம்," என்றார். மேலும் சசிகலா முதல்வராக வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட துணை சபாநாயகர் தம்பிதுரை தனது லெட்டர் பேடைப் பயன்படுத்தி இருக்கக் கூடாது என்றும் வெங்கையா நாயுடு கூறினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசுக்கு கோர்ட்டு நோட்டீசு அனுப்பியிருக்கிறதே? என்ற கேள்விக்கு, "உயர் நீதிமன்றத்துக்கு மத்திய அரசு பதில் அளிக்கும்," என்றார்.