சென்னை: அதிமுகவில் தமக்கு எதிராக ஜாதி ரீதியாக கிளம்பியுள்ள அதிருப்தியை சமாளிக்கும் வகையில் முதல்வராகும் சசிகலா அமைச்சரவையில் கவுண்டர்கள், தலித்துகள் மற்றும் வன்னியர்களுக்கு கூடுதல் இடம்தர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய சசிகலா அடுத்து முதல்வர் நாற்காலியை நோக்கி வேகமாக நகருகிறார். முதல்வர் பன்னீர்செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுச்செயலர் பதவியை கைப்பற்ற எப்படி ஒரு நாடகம் 25 நாட்கள் நடத்தப்பட்டதோ அதேபோல் முதல்வர் பதவியை கைப்பற்ற 2-ம் கட்ட நாடகம் நாளை முதல் அரங்கேற இருக்கிறது. அதிமுக மாவட்ட நிர்வாகிகளை சசிகலா நாளை முதல் சந்திக்க உள்ளார்.
இச்சந்திப்போது அதிருப்தியில் உள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு பதவிகள் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட உள்ளது. அதேபோல் கவுண்டர்கள், தலித்துகள், வன்னியர்களுக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற அதிருப்தியை போக்கவும் வாக்குறுதி அளிக்கப்பட இருக்கிறது. தற்போதைய அமைச்சரவையில் 28 கவுண்டர் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் 3 பேர்தான் அமைச்சர்கள். 32 தலித்துகள் எம்.எல்.ஏ.க்களாக இருந்தபோதும் 3 பேர்தான் அமைச்சர்கள். வன்னியர்களில் 19 பேர் எம்.எல்.ஏ.க்கள். 5பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
அதே நேரத்தில் தேவர் சமூகத்தினர் 20 பேர்தான் எம்.எல்.ஏ.க்கள். ஆனால் 9 அமைச்சர்கள் உள்ளனர். இதுதான் மற்ற ஜாதியினரின் கடும் அதிருப்திக்கு காரணம். நாளை முதல் நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் நாடகத்தில் சசிகலா முதல்வராகும் போது அமைச்சரவையில் ஜாதி ரீதியாக கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்ற ஆசைவார்த்தையும் காட்டப்பட்டு ஆதரவை தக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.