மதுரை: வருமான வரித்துறை நடவடிக்கையை கண்டித்து பேசிய ராமமோகனராவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் கூறியதாவது: இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இவ்வாண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது உறுதி.
வருமானவரித் துறையின் நடவடிக்கையை கண்டித்து பேசிய (தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர்) ராமமோகனராவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது குறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சரிடம் விளக்கமாக கூறுவேன். மேலும் இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்குள் அவர்களை விடுவிக்க வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். ராமமோகனராவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது, ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்பதை போல வெறும் பேச்சளவில்தான் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.