சென்னை: அதிமுக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை சசிகலா நாளை முதல் போயஸ் கார்டனில் நடத்துகிறார். 'சின்னம்மா நீங்கதான் முதல்வராக வேண்டும்' என்ற கோஷம்தான் இனி 6 நாட்களும் போயஸ் கார்டனில் எதிரொலிக்கப் போகிறது. இந்த நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக ஜனவரி 10 அல்லது 12-ந் தேதி முதல்வர் பதவியேற்க திட்டமிட்டுள்ளாராம் சசிகலா. ஜெயலலிதா மறைந்த உடனேயே கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற முயற்சித்தார் சசிகலா. ஆனால் மத்திய அரசின் முட்டுக்கட்டையால் அது நடக்கவில்லை. இதனால் முதல்வரானார் ஓ பன்னீர்செல்வம். இதையடுத்து நாடக காட்சிகள் மூலம் அதிமுக நிர்வாகிகள் தம்மை ஆதரிக்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கினார் சசிகலா. நாள்தோறும் லெட்டர் பேடு சங்க தலைவர்களும் அதிமுக நிர்வாகிகளும் போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டு 'சின்னம்மா நீங்க தான் பொதுச்செயலராகனும்' என கெஞ்சவைக்கப்பட்டனர்.
ஒரு மாத நாடகத்தின் நிறைவாக அதிமுக பொதுக்குழு சசிகலாவை பொதுச்செயலராக நியமித்தது. அவரும் தம்மை ஜெயலலிதாவாக உருமாற்றிக் கொண்டு அதிமுக பொதுச்செயலராக பதவியேற்றார். இதையடுத்து தற்போது முதல்வர் பதவிக்கு குறிவைத்து அடுத்த கட்ட நாடகத்தை அரங்கேற்ற தொடங்கிவிட்டார் சசிகலா. அமைச்சர்கள் மூலமாக முதல்வர் பன்னீர்செல்வம் பதவி விலக நெருக்கடி கொடுக்கப்பட்டது. பின்னர் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மூலம் கலகக் குரல் எழுப்பப்பட்டது. இதன்விளைவாக தமது ராஜினாமா கடிதத்தை போயஸ் கார்டனில் மன்னார்குடி கோஷ்டியிடம் கொடுத்துவிட்டாராம் ஓ பன்னீர்செல்வம்.
இதனிடையே அதிமுகவின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நாளை முதல் வரும் 9-ந் தேதி வரை சசிகலா போயஸ் கார்டனில் நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 'சின்னம்மா நீங்கதான் முதல்வராகனும்' என்ற கோஷங்களைத் தவிர வேறு எதுவும் முன்வைக்கப்படப் போவதில்லை. இந்த மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்ட முடிவில் ஜனவரி 10 அல்லது 12-ந் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பொறுப்பேற்க அதாவது கடந்த ஒரு மாத நாடகத்தின் 2-வது பாகமும் முடிவுக்கு வர உள்ளதாம்.