சென்னை: பண மதிப்பிழப்பு முடிவை மோடி அறிவித்த தினம், மத்திய அமைச்சர்களும், ரிசர்வ் வங்கி இயக்குநர்களும 'சிறை' வைக்கப்பட்டிருந்ததாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் பணமதிப்பு இழப்பு பொருளாதாரத்தை முடக்கிய பொறுப்பற்ற செயல் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் அக்கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அவர் மத்திய அரசின் நடவடிக்கையை விளாசினார். சிதம்பரம் பேசுகையில், நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி, பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், ஏற்கனவே பேசியும், எழுதியும் வைத்த, தயாரித்து வைத்த காகிதங்களை அமைச்சரவை ஏற்றுக்கொள்வதைப்போல ஏற்றுக்கொண்டு, பரிந்துரை செய்வதைப்போல பரிந்துரை செய்து, அரை மணி நேரத்தில் அமைச்சரவை கூட்டம் முடிவடைந்தது.
சிறை பிடிப்பு:
அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்க இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. கேபினட் கூட்டம் முடிந்ததும், அனைத்து அமைச்சர்களும் அங்கேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர். யாரும் வெளியே போகக் கூடாது என கூறி, அனைத்து அமைச்சர்களின் மொபைல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காரணம் என்ன:
ஒரு நாட்டில் இவ்வளவு பெரிய முடிவை, இவ்வளவு மோசமான முறையில் எடுத்ததாக உலகத்தில் வரலாறே கிடையாது. கடந்த 50 ஆண்டுகளிலே எந்த பெரிய பொருளாதாரத்திலே இதைப்போன்று பணமதிப்பிழப்பு செய்திருக்கிறார்கள் என்று கூற முடியுமா. பணவீக்கம் (விலையேற்றம்) கட்டுக்கு மீறி போய்விட்டால் அந்தப் பணத்திற்கு மதிப்பு கிடையாது என அறிவிக்கலாம். அல்லது பணம் ஸ்திரத்தன்மையை இழந்துவிட்டது என்றாலும் அறிவிக்கலாம். இது டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பை வைத்து தீர்மானிக்கப்படுவது.
நல்லாத்தானே இருக்கிறது:
ஆனால், இந்திய ரூபாய் ஸ்திரத்தன்மையை இழக்கவில்லை. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 67 அல்லதலு 68 என்ற அளவில் ஸ்திரமாகத்தான் இருக்கிறது. இந்தியாவின் பணவீக்கம் உயரவும் இல்லை. இந்தியாவின் பணவீக்கம் 5 முதல் ஐந்தேகால் சதவீதம் என நிலையாகத்தான் இருக்கிறது. இந்த நேரத்தில் பணம் செல்லாது என்று அறிவித்ததற்கு என்ன காரணம் என்பதை ரிசர்வ் வங்கி இதுவரை கூறவில்லை.
விலைகளில் வீழ்ச்சி:
மோடியின் திடீர் அறிவிப்பால் நவம்பர் 8ம் தேதியிலிருந்து இன்றைய தேதிக்குள், நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தக்காளி ஒரு குவிண்டால் 2659 ரூபாய் வீழ்ச்சியடைந்தது 1920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உருளைக்கிழங்கு 1400ல் இருந்து 924 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதுபோன்ற விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.