சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவர் மரணத்துக்குப் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைந்து, அவரது இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்ததும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பியுள்ள கடித விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில், "தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தீவிர காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக செப்டம்பர் 22-ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடக்கத்தில் அவருடைய உடல்நிலை சீராக இருந்தது. பின்னர் திடீரென மோசமடைந்தது. 50 நாள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவருடைய உடல்நிலை சற்று தேறியது. இதையடுத்து நவம்பர் 19-ந் தேதி அவர் பல்நோக்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார். டிசம்பர் 4-ந் தேதி மாலை நான் மும்பையில் இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் உடனே சென்னைக்கு விரைந்து வந்தேன்.
மருத்துவமனையில் அவருக்கு அளித்து வந்த சிகிச்சை குறித்து மருத்துவனை தலைவர் மற்றும் டாக்டர்கள் எனக்கு விளக்கம் அளித்தனர். ஜெயலலிதாவுக்கு நுரையீரல் செயல்பாட்டுக்கான எந்திரமான எக்மோ வழியாக சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தனர். எனினும் அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டது. இனி காப்பாற்ற வழியில்லை என்ற நிலையில், டிசம்பர் 5-ந் தேதி இரவு 11.30 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. அதே நாள் இரவு அ.தி.மு.க. கட்சியின் பொருளாளரும், மூத்த அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகையில் என்னை சந்தித்தார். அப்போது ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் தன்னை அ.தி.மு.க.வின் சட்டமன்றத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் அளித்தார்.
இதனால் நான் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 164(1)ன் கீழ் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக முதல்வராக நியமித்து அரசு அமைக்குமாறு உத்தரவிட்டேன். இதனை தொடர்ந்து முதல்வராக அறிவிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய அமைச்சரவை பட்டியலை என்னிடம் அளித்தார். டிசம்பர் 6-ந் தேதி பகல் 1 மணிக்கு கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது," என்று குறிப்பிட்டுள்ளார்.