சென்னை: திமுக பொதுக்குழு சென்னையில் நாளை கூடுகிறது. அக்கட்சியின் செயல் தலைவராகும் ஸ்டாலின் தாம் நீண்டகாலம் வைத்திருந்த இளைஞரணி தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்பாரா என்பது சந்தேகம்தான். மருத்துவர்களின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார் கருணாநிதி. இருப்பினும் ஸ்டாலின் செயல் தலைவராக்கப்படும் போது கருணாநிதி கூட்டத்தில் இருக்க வேண்டும் என்பது திமுகவினர் எதிர்பார்ப்பு.
இதை நிறைவேற்றும் வகையில் ஸ்டாலினை செயல் தலைவராக்கும் கருணாநிதியின் அறிவிப்பு பொதுக்குழுவில் வாசிக்கப்படலாம் என தெரிகிறது. செயல் தலைவராகும் ஸ்டாலின் கட்சி பொருளாளர் பதவியை தொடர்ந்து தம்மிடமே வைத்துக் கொள்வார் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தம் வசம் உள்ள இளைஞரணித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க ஸ்டாலின் முன்வந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞரணி இணை செயலர் வெள்ளகோவில் சாமிநாதன் அல்லது துணை செயலர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரில் ஒருவருக்கு இப்பதவி கிடைக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் முக அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவதற்கான சமிக்ஞைகள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர். அதேபோல சற்குணபாண்டியன் மறைவால் காலியாக உள்ள துணைப் பொதுச்செயலர் பதவியை தமக்கு தர வேண்டும் என கனிமொழி தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறதாம்.