தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. இப்போதைக்கு நான்கு அணிகள் களத்தில் உள்ளன. டி ராஜேந்தர் தலைமையில் ஒரு அணி. இப்போதைய நிர்வாகிகளில் கலைப்புலி தாணு தவிர, டி சிவா, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரைக் கொண்ட இன்னொரு அணி, மூன்றாவது.. குஷ்புவை முன்னிறுத்தி விஷால் அமைத்திருக்கும் அணி. இயக்குநர் திருமலையும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதால், இது நான்கு முனைப் போட்டி கொண்ட தேர்தல் ஆகிவிட்டது.
இதில் கடுமையான எதிர்ப்பு என்பது குஷ்புவுக்குத்தான். குஷ்புவை வைத்து விஷால் ஆடும் விளையாட்டு இது என்பதால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் குஷ்புவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்கத்தை அவமதித்துவிட்டார் என விஷால் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதனால்தான் அவரை சங்கத்திலிருந்து நீக்கி வைத்துள்ளனர். 'குஷ்புவை வைத்து தயாரிப்பாளர் சங்கத்தை தன் பிடியில் கொண்டு வரப் பார்க்கிறார்... இதற்கு இடமளிக்கக் கூடாது' என மற்ற மூன்று அணிகளுமே தீவிரமாக உள்ளன.
'இன்னொன்று அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுள் ஒருவராக இருக்கிறார். அவரால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க முடியாது. எனவே முழுமையாக சினிமாவில் உள்ள ஒருவரையே தலைவராக்க வேண்டும். வேண்டாம் குஷ்பு' என்றும் இப்போதே பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
சமாளிப்பாரா குஷ்பு?