சென்னை: சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதால் விரக்தி அடைந்த சென்னைஅதிமுக தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்ற அதே நேரத்தில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தின் பல இடங்களில் துக்க தினமாக அதிமுகவினர் அனுசரித்தனர்.
தற்போது சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த முதல்வர் நாற்காலியில் சசிகலாவையெல்லாம் அமர வைக்கிறார்களே என்ற கொந்தளிப்பும் விரக்தியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினரிடத்தில் இருந்து வருகிறது. சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்ற கோஷம் நேற்று உச்சத்தை அடைந்தது. இதில் கடும் விரக்தி அடைந்த சென்னை பிராட்வே பிஆர் கார்டன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி என்ற அதிமுக தொண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.