மதுரை: திருமங்கலம் சட்டசபை தொகுதி இந்திய அளவில் பிரபலமானதற்கு காரணம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து சத்தியம் வாங்கி ஓட்டுக்களை பெற்றதுதான். 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். உடல் நலக்குறைவினால் அவர் மரணமடையவே, திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. 2009ம் ஆண்டு ஆளும் கட்சியாக இருந்த திமுக, அப்போது அழகிரியின் மூலம் அரங்கேற்றிய அராஜகங்கள் வரலாற்றில் இடம் பெறும் அளவிற்கு சென்றது. இன்றைக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் திருமங்கலம் பார்முலா என்று பேசும் அளவிற்கு இந்திய தேர்தல் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
ப்ளெக்ஸ் பேனர்கள்:
திருமங்கலத்தில் சசிகலா போட்டியிட விரும்பினால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். திருமங்கலத்தில் சசிகலா போட்டியிடப் போகிறார் என்ற தகவல் வெளியான உடனேயே ஆங்காங்கே ப்ளக்ஸ் பேனர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் முளைத்து விட்டன.
பெண் வாக்காளர்கள்:
திருமங்கலத்தின் சிட்டிங் எம்.எல்.ஏவும் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் ஒருவேளை ராஜினாமா செய்து தேர்தல் நடைபெறும் பட்சத்தில் சசிகலாவை எப்பாடு பட்டாவது ஜெயிக்க வைப்போம் என்று அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் திருமங்கலம் தொகுதியில் உள்ள பெண் வாக்காளர்கள் சசிகலாவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
எதிர்ப்பை சமாளிக்க வியூகம்:
ஆர். கே. நகரில் சசிகலா போட்டியிட்டால் தோற்கடிப்போம் என்று கூறுவதால் அவரது பார்வை தென் மாவட்டங்களின் பக்கம் திரும்பியுள்ளது. திருமங்கலத்தில் எதிர்ப்பை சமாளிக்க ஆளுங்கட்சியினர் 2009 பார்முலாவை கையில் எடுப்பார்கள் என்றே கூறப்படுகிறது.
சசிகலாவின் மனநிலை:
என்னதான் ஓட்டு போடமாட்டேன் என்று கூறினாலும் இரட்டை இலையை பார்த்தால் அதிமுக பெண் தொண்டர்களின் மனநிலை மாறிவிடும் என்று நிர்வாகிகள் நம்புகின்றனர். திருமங்கலத்தில் சசிகலா போட்டியிடுவாரா? அல்லது தேனி, ஆண்டிபட்டி என்று மாறுவாரா? தஞ்சாவூர் மாவட்டம் பக்கம் கவனத்தை செலுத்துவாரா இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்து விடும்.