சென்னை: கட்சியிலும் ஆட்சியிலும் தம்மீதான கடும் நெருக்கடிகளாலும் கடுமையான அர்ச்சனைகளாலும் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஒட்டுமொத்தமாக அரசியலைவிட்டே ஒதுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து கட்சி, ஆட்சி இரண்டும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நினைத்தது மன்னார்குடி கோஷ்டி. ஆனால் மத்திய அரசின் நெருக்கடியால் ஓபிஎஸ் முதல்வராக கொந்தளித்தது மன்னார்குடி வகையறா. அதன்பின்னர் மத்திய அரசின் செல்லப்பிள்ளையாகவே ஓபிஎஸ் மாறிப் போனார்... மன்னார்குடி வகையறாவை எதிரியாகவே பார்த்தது மத்திய அரசு. எத்தனையோ சமாதான லாபிகள் நடந்தேறியும் ஓ பன்னீர்செல்வத்தையே மத்திய அரசு தூக்கிப் பிடித்தது.
போயஸுக்கு போகாத ஓபிஎஸ்:
ஒருகட்டத்தில் மத்திய அரசு உத்தரவுப்படி டெல்லி சென்ற பின்னர் போயஸ் கார்டன் பக்கமே போகாமல் இருந்தார் பன்னீர்செல்வம். பின்னர் திடீரென போயஸ் கார்டனுக்கு போய் 10 நிமிடம் மட்டும் பேசிவிட்டு வந்தார் ஓபிஎஸ்.
பாய்ச்சலை காட்டிய போயஸ்:
இந்த நிலையில் பொதுக்குழுவுக்கு முதல்நாள் கார்டனில் இருந்து அழைப்புவர இறுகிய முகத்துடன் கிளம்பிப் போனார் ஓபிஎஸ். அங்கு ஓபிஎஸ் மீது மன்னார்குடி பாய்ச்சலை வெளிப்படுத்தியதுடன் மத்திய அரசுடன் சமாதானமாகிவிட்டோம்; பொதுச்செயலர் நாங்கதான் என ஏகடியம் செய்து கடும் வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறது. இதில் ரொம்பவே அப்செட்டாகிப் போனாராம் பன்னீர்செல்வம்.
சரணடைய முயற்சி:
இதனிடையே ஓபிஎஸ் குடும்பத்தினரும் எதற்கு வம்பு? அமைச்சரவையில் 2-வது இடத்தையாவது தக்க வைத்து கொள்வோம்... பேசாமல் சரணடைந்துவிடுவது நல்லது என கூறியிருக்கின்றனர். இதையடுத்து அதிமுக தலைமை நிலையத்தில் சசிகலா காலில் விழுந்து வெள்ளைக் கொடி காட்டினாராம் ஓபிஎஸ்.
ராஜினாமா கடிதம்:
ஆனாலும் அவர் மீதான கோபம் மன்னார்குடி குடும்பத்துக்கு நீங்கவில்லை. எங்கே அவர் முதல்வர் பதவியை விட்டு விலகமாட்டாரோ என அஞ்சி அமைச்சர்கள் மூலமாக நெருக்கடி கொடுத்தது. இதன் உச்சகட்டமாக நேற்று போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டார் ஓபிஎஸ். அப்போதும் கடுமையான வார்த்தைகளால் ஓபிஎஸ் அர்ச்சிக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் ராஜினாமா கடிதத்தையும் வாங்கிக் கொண்டார்களாம்.
அரசியலுக்கு முழுக்கு?:
இதனால் நான் முழுவதுமாக ஒதுங்கிக் கொள்கிறேன்... என்னைவிட்டுவிடுங்கள் என கூறிவிட்டு கிளம்பிவிட்டாராம் ஓபிஎஸ். தற்போதைய மனநிலையில் அம்மா இல்லாத அரசியலில் நாம் என்ன செய்ய முடியும்? பொருளாளர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு அரசியலைவிட்டே ஒதுங்கிவிட்டால் என்ன என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறார் அண்ணன் என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.