சென்னை: தமிழக அரசியலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், வெற்றிடத்தை நிரப்ப நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்து களேபரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி, வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஒன்இந்தியாதமிழ் வெப்சைட் சார்பில் கருத்து கணிப்புகள் நடத்தினோம்.
ஒரு கருத்துக் கணிப்பில் ரசிகர்களை நம்பி ரஜினி அரசியலில் குதிப்பாரா என்று கேள்வி கேட்கப்பட்டு, நிச்சயம் அவர் வருவார் என்றும், கண்டிப்பாக வரமாட்டார் என்றும் இரு ஆப்ஷன்கள் தரப்பட்டன. நிச்சயம் அவர் வருவார் என்று 12.24% சதவீதம் பேர் வாக்களித்த நிலையில், கண்டிப்பாக வர மாட்டார் என 87.76% பேர் வாக்களித்துள்ளனர்.
ரஜினி அரசியலில் குதித்தால் சாதிக்க முடியுமா? என்ற மற்றொரு கேள்வியுடன் கூடிய வாக்கெடுப்பில், நிச்சயம் முடியும் என்ற ஆப்ஷனுக்கு 22.85% வாசகர்கள் வாக்களித்தனர். சான்ஸே இல்லை என 21.28% பேர் வாக்களித்தனர். அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று, 55.87% பேர் வாக்களித்துள்ளனர். இப்போதும் ரஜினிக்கான இடம் அரசியலில் உள்ளதாக கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு, நிச்சயம், அவர் வர வேண்டும் என்று, 23.35% வாசகர்கள் வாக்களித்துள்ளனர். அப்படியெல்லாம் எந்த இடமும் இல்லை என்று, 76.65% வாசகர்கள் கூறியுள்ளனர்.
கல்வியறிவு கொண்ட படித்த ஆன்லைன் வாசகர்கள் மத்தியில் ரஜினி அரசியலுக்கு வருவதில் உடன்பாடு இல்லை என்பதை இந்த கருத்துக் கணிப்பு எடுத்துரைக்கிறது. ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பதை அறிய வழக்கம்போலவே காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.