டெல்லி: நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேன்ட் நிறுவனமிடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டரை வாங்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்காக முன் பணமாக ரூ.2,360 கோடி மதிப்பிலான வங்கி ஒப்பந்தங்களை அந்நிறுவனத்திற்கு அளித்திருந்தது. இதனிடையே ரூ.360 கோடி அளவுக்கு லஞ்சம், முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால், ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. அமலாக்கத்துறையும் களத்தில் இறங்கியுள்ளது.
இவ்வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ஊழலில் முன்னணி பத்திரிகையாளர்களுக்கு உள்ள தொடர்பு பற்றிய விவரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து தாக்கல் செய்யப்ப்டட மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் இந்த விவரங்களை கேட்டுள்ளது. ஹெலிகாப்டர் ஊழல் அம்பலமானது முதலே டெல்லியிலுள்ள பத்திரிகையாளர்கள் சிலருக்கும் இதில் தொடர்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. ஒரு பத்திரிகையாளருக்கு அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 360 கோடி லஞ்சம் பல முக்கிய பிரமுகர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50 கோடி பத்திரிகையாளர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு பத்திரிகையாளருக்கும் அவரது மனைவிக்காகவும் ரூ.28 லட்சம் செலவிப்பட்டதாம். இதுகுறித்த தகவல் அமலாக்கத்துறையிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், அதுகுறித்த விவரங்களை சுப்ரீம் கோர்ட் இன்று கேட்டுள்ளது.