டெல்லி: உத்தபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேர்தி நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மாநில சட்டசபைகளின் ஆயுட் காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் தேதியை நாளை மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட், மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. கோவாவில் பாஜகவும் பஞ்சாப் மாநிலத்தில் சிரோமன்மணி அகாலிதளம்- பாஜக கூட்டணி அரசும் ஆட்சியில் உள்ளன. கடந்த ஆண்டே இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் வியூகங்களை வகுத்து கட்சிகள் பிரசாரத்தில் குதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.