மங்களூர்: கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஹெச்.எஸ்.மகாதேவ பிரசாத் திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 58.
5 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாதேவ பிரசாத், சித்தராமையா அரசில் கூட்டுறவு மற்றும் சர்க்கரை துறை அமைச்சராக பதவி வகித்தார். மதசார்பற்ற ஜனதாதள கட்சியிலிருந்தபோது, அக்கட்சி பாஜகவோடு அமைத்த கூட்டணி ஆட்சியின்போது, கன்னடம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். ம.ஜ.த கட்சியிலிருந்து பிரிந்து 2007ல் சித்தராமையாவோடு இணைந்து காங்கிரசில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். சித்தராமையாவின் நெருங்கிய நண்பராக அறியப்பட்டு வந்தவர் மகாதேவ பிரசாத். தமிழக எல்லையான, சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட் தொகுதியிலிருந்து, 1994, 1999, 2004, 2008 மற்றும் 2013 ஆண்டுகளில் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றவர் மகாதேவ பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிக்மகளூர் அருகேயுள்ள கொப்பா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க மகாதேவ பிரசாத் சென்றிருந்தார். அவர் சிக்மகளூரிலுள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்த நிலையில், இரவு மரணமடைந்தார். காலையில்தான் ரிசார்ட் ஊழியர் சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அமைச்சர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்பட்டாலும், பிரேத பரிசோதனை முடிவில் காரணம் தெரியவரும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் மறைவையொட்டி, கர்நாடகாவில் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலரும் மகாதேவ பிரசாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.