டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 31ம் தேதி தொடங்கிறது. பொது பட்ஜெட்டும், ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்ட முதல் பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய ஆண்டு தொடங்கிய உடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். அந்தக் கூட்டத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் சில நடைமுறைகளை மாற்றி வருகிறது. அதன்படி, இதுவரை தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த பொது பட்ஜெட்டும் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டு ஒரே பட்ஜெட்டாக இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்த அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அதில், இம்மாதம் 31ம் தேதி பட்ஜெட் தொடர் தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் பொது பட்ஜெட்டும் ரயில்வே பட்ஜெட்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 92 ஆண்டுகாலம் நடைமுறையில் பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என்ற தனித் தனி பட்ஜெட் முறைகள் முடிவிற்கு வருகின்றன. முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய அதே நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.