சென்னை: போயஸ் தோட்டத்தில் மன்னார்குடி கோஷ்டியிடம் ராஜினாமா கடிதத்தை முதல்வர் பன்னீர்செல்வம் கொடுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான கடைசி அமைச்சரவை கூட்டம் இதுவாக இருக்கலாம் என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து மத்திய அரசின் விருப்பத்தின் பேரில் தமிழக முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக அவரை படாதபாடுபடுத்திவிட்டது மன்னார்குடி கோஷ்டி. ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து முதல்வர் பதவியை அபகரிக்க மன்னார்குடி கோஷ்டி போட்ட சதித் திட்டங்கள் வெற்றி பெற்று வருகின்றன. அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலா தற்போது முதல்வர் பதவியை கபளீகரம் செய்யப் போகிறார்.
ராஜினாமா கடிதம்:
இதற்காக ஓ. பன்னீர்செல்வத்துக்கு கடும் நெருக்கடி கொடுத்து அவரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை சில நாட்களுக்கு வாங்கிவிட்டனராம். இந்த நிலையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென படுவேகமாக இயங்கி வருகிறார். விவசாயிகள் தற்கொலை தொடர்பாக உயர்நிலைக் குழு ஆய்வு செய்யும் என அறிவித்திருக்கிறார்.
அடுத்தடுத்து...:
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி நாளைய மறியல் போராட்டத்தை கைவிட செய்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் கொடுத்திருக்கிறார். இன்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார்
2-வது அமைச்சரவை கூட்டம்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டிய 2-வது அமைச்சரவை கூட்டம் இது. இக்கூட்டத்தில் வறட்சி நிலவரம், ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
கடைசி அமைச்சரவை கூட்டம்?:
ஏற்கனவே சசிகலா வரும் 10 அல்லது 12-ந் தேதி முதல்வராக கூடும் எனக் கூறப்பட்டு வருகிறது. ஆகையால் ஓ. பன்னீர்செல்வம் இன்று கூட்டியதுதான் அவரது கடைசி அமைச்சரவை கூட்டமாக இருக்கலாம் என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.