சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார். விவசாயிகள் பிரச்சினை குறித்து முதல்வருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். திமுக செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் சென்று கட்சி தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், விவசாயிகள் பிரச்சினை குறித்து பேச முதல்வர் பன்னீர் செல்வத்திடம் நேரம் கேட்டிருந்தேன். இன்று மாலை 5 மணிக்கு சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியுள்ளார் பன்னீர்செல்வம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை இவ்வாண்டு நடத்தியே தீருவோம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதை குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அதன்பிறகு தீர்மானிப்போம் என்றும் தெரிவித்தார். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தமிழக ஆட்சி சிறப்பாக நடக்கிறதா என்ற நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ஸ்டாலின், நீங்கள் என்ன நோக்கத்தில் கேட்கிறீர்கள் என தெரியும்.. அதற்கு நான் பலிகடா ஆக முடியாது என கூறிவிட்டார்.