சென்னை: சென்னையில் அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்மொழிய, முதன்மை செயலாளர் துரைமுருகன் வழிமொழிய திமுக செயல் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே கட்சி விதி 18-பிரிவு 4ன் கீழ் திருத்தம் கொண்டுவரப்பட்டு ஸ்டாலின் செயல் தலைவரானார்.
அவர் தற்போது வகித்து வரும் பொருளாளர் பொறுப்புடன் செயல் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக மேற்கொள்வார் என கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்தார். மேலும், செயல் தலைவர் என்றாலும், கட்சி தலைவருக்கு உரிய அனைத்து அதிகாரங்களும் ஸ்டாலினுக்கு உண்டு என்றும், அன்பழகன் தெரிவித்தார். திமுக வரலாற்றில் முதல் முறையாக, கட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. திமுகவின் முதலாவது செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல பொருளாளர் பதவியில் இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு பெரிய பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை. கட்சியில் அடுத்த தலைமுறை தலைவர்கள் வளர்த்தெடுக்கப்படவில்லை என்ற தோற்றத்தை இந்த நிகழ்வு காண்பிக்கிறது.