சினிமாவே கருப்புப் பணத்தில்தான் இயங்குகிறது. இது தெரியாமல் இருக்குமா வருமான வரித்துறைக்கு? அதனால் ஷூட்டிங்குளை கணக்கெடுத்துள்ள ஐடி துறை விரைவில் ரெய்டு விடப் போகிறது என்று ஏற்கெனவே கூறியிருந்தோம் (டிச 12-ம் தேதி). அது இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது, சென்னையில் பல இடங்களில்.
நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு நடந்த படப்பிடிப்புகள், ரிலீசான படங்கள், அவற்றில் ஈடுபட்ட பைனான்சியர்களைக் குறிவைத்து இந்த ரெய்டு நடக்கிறது. சென்னையில் முக்கியமான 10 இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது. முழு விவரமும் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.