சென்னை: சென்னையில் அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சி பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிய திமுக செயல் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு ஸ்டாலின் நன்றியுரையாற்ற அழைக்கப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது: நான் நன்றியுரையாற்ற வரவில்லை. ஏற்புரையாற்ற மட்டுமே வந்துள்ளேன்.
உடல் நலக்குறைவு:
உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி வராமல் பொதுக்குழு நடக்கிறது. தலைவரான கருணாநிதி வர முடியாத நிலை இருப்பதால் திமுக விதிமுறைகளில் திருத்தம் செய்து என்னை செயல் தலைவராக்கியுள்ளனர். முன்னதாக திமுக பொதுச்செயலாளர், முதன்மை செயலாளர், கழக முன்னோடிகள் ஆலோசனை செய்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
ஓய்வுக்கே ஓய்வு:
செயல் தலைவராக நியமித்தது திடீரென எடுத்த முடிவு இல்லை. ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் கருணாநிதி. ஆனால் அவருக்கு இப்போது ஓய்வு தேவைப்படுகிறது. கருணாநிதி நல்லபடியாக உடல்நலம் தேற வேண்டும் என்பதால் ஓய்வு கொடுத்துள்ளோம்.
பள்ளி காலத்தில் ஆர்வம்:
நான் பள்ளி பருவத்தில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே, இந்த இயக்கத்தின் மீது தானாகவே ஆர்வம். தலைவர் கருணாநிதியாற்றுகிற பணி, அவரை சந்திக்க வரும் கழக தோழர்கள், கூட்டத்திற்கு அவர் செல்லும் பாங்கு உள்ளிட்டவற்றை பார்த்து, பார்த்து என்னை அறியாமல் எனக்கு ஆசை ஏற்பட்டது. சிறு வயதில், கோபாலபுரம் வட்ட தேர்தலிலேயே உதய சூரியனுக்கு ஓட்டு போடுங்கள் என பிரசாரத்தை தொடங்கினேன். பிறகு இளைஞர் மன்றத்தை உருவாக்கி, இளைஞரணி என்ற அமைப்பை ஏற்படுத்தி, பிறகு, வட்ட பிரதிநிதியாக தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
படிப்படியாக முன்னேறினேன்:
பிறகு, பகுதி அளவில், மாவட்ட பிரதிநிதி என்ற பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றேன். மாவட்ட அளவில் நடைபெறும் கட்சி தேர்தலில் பொதுக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டேன். பிறகு செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. அமைப்பு குழு உருவாக்கப்பட்டது. 6 பேரில் நானும் ஒருவராக நியமிக்கப்பட்டேன். இளைஞரணி அமைப்பாளர், செயலாளராக பல பொறுப்புகளை ஏற்று, திமுக துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். பிறகு திமுக பொருளாளராக உயர்ந்தேன்.
கனத்த இதயம்:
இதையெல்லாம் நான் சொல்வதற்கு என்ன காரணம் என்று கேட்டால், இந்த பொறுப்புக்கெல்லாம் நான் வந்தபோது நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். அளவிட முடியாத அளவுக்கு பெருமைப்பட்டேன். ஆனால் இன்றைக்கு நான் அந்த நிலையிலே இல்லை. அதுதான் உண்மை. அன்றைக்கு அதனை பெருமையோடு வரவேற்று ஏற்றுக்கொள்கிற நேரத்தில், இன்றைக்கு தலைவருடைய உடல்நிலை இருக்கக் கூடிய சூழ்நிலையிலே இந்தப் பொறுப்பு ஏற்கிற நேரத்தில் அந்த மகிழ்ச்சியை என்னால் அடைய முடியவில்லை. ஒரு கனத்த இதயத்தோடுதான் உங்களுடைய அன்போடு, உங்களடைய உற்சாகத்தோடு, உங்களுடைய பேராதரவோடு இந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க விரும்புகிறேன்.
துணையாக நிற்பேன்:
செயல் தலைவர் என்றாலும், கட்சி தலைவருக்கு துணை நிற்கும் வகையில்தான் எனது பணி அமையும். தலைவர், பொதுச்செயலாளர், முதன்மை செயலாளர், கழக முன்னோடிகள் காட்டும் வழியில் நின்று உறுதியாக இயக்கப் பணியை உங்கள் ஒத்துழைப்போடு நான் ஆற்றுவதற்கு தயாராக இருக்கிறேன். இதுவே எனது ஏற்புரை.
பொறுப்பு:
கருணாநிதி அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தை சொல்வது உண்டு. பல நிகழ்ச்சிகளில் நானும் அதை சொல்லியுள்ளேன். நான் சென்னை மேயராக பொறுப்பேற்றபோது, "அது பதவியில்லை, பொறுப்பு" என்று என்னிடம் கருணாநிதி கூறினார். மக்களுக்கு பொறுப்போடு கடமையாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அதை பொறுப்பு என குறிப்பிடுகிறேன், என்று கருணாநிதி குறிப்பிட்டார். அதேபோல செயல் தலைவர் பதவியை பதவியாக கருதவில்லை. பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன். கருணாநிதி, அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இதயமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.