இந்திய டெலிகாம் சந்தையில் கடந்த 15 வருடங்களாக முடிசூடா மண்ணனாக விளங்கியது ஏர்டெல். ஏர்செல், ஐடியா செல்லுலார், பிஎஸ்என்எல், சமீபத்தில் வர்த்தகத்தை விட்டு வெளியேறிய எம்டிஎஸ், யுனிநார் என அனைத்து நிறுவனங்களுடன் போட்டுப்போட்டு இந்திய டெலிகாம் சந்தையில் வர்த்தகத்திலும் வருவாயிலும் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்து வந்தது. இவை அனைத்திற்கும் காரணம், ஏர்டெல் நிறுவனத்தின் தொடர் முதலீடும், புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளும் தான். ஆனால் இப்போது கதையே வேறு.. காரணம் ஜியோ.
ஜியோ அறிமுகம்:
ரிலையன்ஸ் நிறுவனம் டெலிகாம் சேவையில் இறங்கத் திட்டமிட்டபோதே ஏர்டெல் நடுங்கியது. இந்நிலையில் இதன் அறிமுகத்தால் மிகப்பெரிய அதிர்வுகளைச் சந்தித்தது ஏர்டெல்.
குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் இலவச 4ஜி சேவைகள் மூலம் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ராகெட் வேகத்தில் உயர்ந்தது.
வளர்ச்சியைத் தடுக்க முயற்சி:
இந்நிலையில், ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை உயர்வைத் தடுக்க ஏர்டெல் மட்டும் அல்லாது வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து ஜியோ கால்களைத் தடுத்தது. ஆனால் டிராய் தலையீட்டால் இந்தப் பிரச்சனை முடிவிற்கு வந்தது. ஏர்டெல் நிறுவனம் செய்த சூழ்ச்சிகள் எதுவும் பயனளிக்காத காரணத்தால் தற்போது, ஏர்டெல்லும் இலவசங்களை அளிக்கத் துவங்கியுள்ளது.
இலவசம்:
செவ்வாய்க்கிழமை ஏர்டெல் நிறுவனம் ஒரு சிறப்புச் சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் தற்போது இணைப்பில் இருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் 4ஜி திட்டத்திற்கு மாறினால் 12 மாதங்களுக்கு உண்டான இண்டர்நெட் டேட்டா இலவசம் என அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் 12 மாதத்திற்கான 4ஜி சேவையின் தோராய மதிப்பு 9,000 ரூபாய்.
டிசம்பர் 31, 2017 வரை:
ஏர்டெல் 4ஜி திட்டத்திற்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3ஜிபி 4ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படும். இது சில ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கு மட்டும் தான் எனவும் குறிப்பிட்டுள்ளது.
பிப்ரவரி 28:
இத்திட்டத்தைப் பெற பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி எனவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
ஜியோவிற்குப் பாதிப்பு..?:
இந்த இலவச திட்டங்கள் மூலம் ஜியோவிற்கு எவ்விதமான பாதிப்புகள் இல்லை. காரணம் மார்ச் மாதம் வரை ஜியோவின் ஹோப்பி நியூ இயர் ஆஃபர் உண்டு. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த இலவச திட்டங்கள் மூலம் தனது வாடிக்கையாளர்கள் வெறியேற்றத்தை மட்டுமே தடுக்க முடியும்.