சென்னை: திமுகவில் எதிர்பார்த்தபடி ஸ்டாலின் செயல் தலைவராகிவிட்டார். ஆனால் அவர் வசம் இருக்கும் பொருளாளர் பதவி, இளைஞர் அணி தலைவர் பதவிகள் தங்களுக்கு கிடைத்துவிடும் என எதிர்பார்த்த திமுக பெரும்தலைகள் அது கிடைக்காமல் போனதால் ஏமாற்றமடைந்துவிட்டனர். திமுகவின் செயல் தலைவராவார் ஸ்டாலின் என்று சொல்லப்பட்டது முதலே அவரிடம் இருக்கும் பொருளாளர் மற்றும் இளைஞர் அணி தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற பட்டிமன்றம் திமுகவில் களைகட்டியது. பொருளாளர் பதவியானது எவ வேலு அல்லது திண்டுக்கல் பெரியசாமிக்கு கிடைக்கலாம் என கூறப்பட்டது. பொன்முடியின் பெயரும் இந்த லிஸ்டில் அடிபட்டது.
அதேபோல் செயல் தலைவரானால் 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தம் வசம் உள்ள இளைஞரணித் தலைவர் பதவியை ஸ்டாலின் விட்டுக் கொடுப்பார். தற்போதைய இளைஞரணி இணை செயலர் வெள்ளகோவில் சாமிநாதன் அல்லது துணை செயலர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அப்பதவி கிடைக்கலாம் என கூறப்பட்டது. அத்துடன் ஸ்டாலின் செயல் தலைவராகும்போது தங்களுக்கு மறைந்த சற்குண பாண்டியன் வகித்த துணைப் பொதுச்செயலர் கொடுக்கப்பட வேண்டும் என கனிமொழி தரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாம். ஆனால் இன்றைய பொதுக்குழுவில் ஸ்டாலின் செயல் தலைவராக மட்டும் நியமிக்கப்பட்டார். பொருளாளர், இளைஞர் அணி தலைவர் மற்றும் துணை பொதுச்செயலர் பதவிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் இப்பதவிகளை எதிர்பார்த்து காத்திருந்த பெருந்தலைகள் ஏமாற்றமடைந்தனர் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.