டெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 73 தொகுதிகளில் பிப்ரவரி 11ல் முதல் கட்ட தேர்தல் நடைபெறும். ஜனவரி 17ம் தேதி முதல் ஜனவரி 24ம் தேதிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை ஜனவரி 25ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் வாங்க ஜனவரி 27ம் தேதி கடைசி நாளாகும். இரண்டாம் கட்ட தேர்தல் பிப்ரவரி 15ம் தேதி 67 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. ஜன. 20 முதல் 27வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை ஜன. 28ல் நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற ஜன. 30 கடைசி நாளாகும்.
மூன்றாம் கட்ட தேர்தல் 69 தொகுதிகளுக்கு, பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜன. 24 முதல் 31ம் தேதிவரை நடைபெறும். வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 2ல் நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற பிப்ரவரி 4ம் தேதி கடைசி நாளாகும். நான்காம் கட்ட தேர்தல், 53 தொகுதிகளுக்கு பிப்ரவரி 23ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை ஜன. 30 முதல் பிப். 6வரை தாக்கல் செய்யலாம், பிப். 7ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனு வாபஸ் பெற பிப். 9 கடைசி நாளாகும்.
ஐந்தாம் கட்ட தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்ய பிப். 2 முதல் பிப்.9வரை அவகாசம் உண்டு. பரிசீலனை பிப். 11ல் நடக்கும். வாபஸ் பெற கடைசி நாள் பிப். 13.
ஆறாம் கட்ட தேர்தல், மார்ச் 4ம் தேதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் பிப். 8 முதல் பிப். 15ம் தேதி வரை நடைபெறும். வேட்புமனு பரிசீலனை பிப். 16ல் நடைபெறும். வாபஸ் பெற 18ம் தேதி கடைசி நாள். ஏழாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல், 40 தொகுதிகளுக்கு மார்ச் 8ம் தேதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் பிப்.11 முதல் பிப்.18 வரை நடைபெறும். பரிசீலனை 20ம் தேதி நடைபெறும். வாபஸ் பெற கடைசி நாள் பிப். 22 ஆகும். மார்ச் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இம்மாநிலத்தை கைப்பற்றவே அனைத்து கட்சிகளும் அதிக ஆர்வம் காட்டிவருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.