சென்னை: திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, தொண்டர்கள் எழுப்பிய கர ஒலியினால் அண்ணா அறிவாலயத்தில் இருந்த கலைஞர் அரங்கேமே அதிர்ந்தது. விசில் பறந்தது. பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பது போல இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்புகளில் திமுக பொதுக்குழு காட்சிகள் ஒளிப்பரப்பானது. ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டவுடன் பல நிர்வாகிகள் கண்ணீர் விட்டு அழுததுடன், உணர்ச்சி பெருக்கோடு காணப்பட்டனர்.
கருணாநிதியிடம் ஆசி:
பொதுக்குழு கூடுவதற்கு முன்பாக சிஐடி காலனி, ராஜாத்தி அம்மாள் வீட்டில் இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று, ஆசிர்வாதம் வாங்கி சென்றார் மு.க.ஸ்டாலின். செயல் தலைவர் பதவி அறிவித்தவுடன் மு.க.ஸ்டாலின், தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியிடம் கோபாலபுரம் வந்து ஆசி பெற்றார்.
கனிமொழி வாழ்த்து:
அப்போது கனிமொழியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு, தனது அண்ணன் செயல் தலைவராக பதவியேற்றதற்கு, தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கனிமொழி பதிவிட்டுள்ளார்.
வழி நடப்போம்:
தொடர்ந்து கனிமொழி பதிவிட்டுள்ள மற்றொரு டுவிட்டில் அவர் தொடர்ந்து தி.மு.க வை தலைவரின் பாதையில் வழி நடத்த அவருக்கு உறுதுணையாக இருப்போம். அவரைப் போல் உழைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அழகிரி ரியாக்சன்:
ஸ்டாலின் செயல்தலைவர் ஆனதற்கு கருணாநிதி ஆசி கொடுத்துவிட்டார். கனிமொழி வாழ்த்து கூறிவிட்டார். ஆனால் அழகிரி ரியாக்சன் என்னவென்று இன்றும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும்.