சென்னை: புதுச்சேரியில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த சிவகுமார், புதுவை சட்டசபை சபாநாயகராகவும் இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக அணிக்கு மாறினார். காரைக்காலுக்குட்பட்ட நீராவி என்ற இடத்தில் கட்டி வரும் திருமண மண்டபத்தின் கட்டுமான பணிகளைப் பார்க்க சிவகுமார் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென சிவகுமார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் நிலைகுலைந்த சிவகுமாரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.
சிவகுமார் கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் சிவகுமாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.