கட்சி அலுவலகத்தில் 5 மாவட்ட செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை - பேனர்கள் கிழிப்பு
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். சென்னை: முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக பொதுச்செயலாளராக அவரின் தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றுள்ளார். பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சசி கலாவுக்கு வரவேற்பு தெரிவித்த அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், கட்சி பொறுப்போடு ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 4ஆம் தேதி முதல் வரும் 9ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், சார்பு அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கும் என சில தினங்களுக்கு முன்பு பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்தார்.
மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை:
வி.கே. சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் முதல் கூட்டம் என்பதால், ப்ளெக்ஸ் பேனர்களை வைத்து விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தலைமை அலுவலகத்தில் வரவேற்பு:
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு 11 மணிக்கு வருகை தந்தார். அங்கு காத்திருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
சசிகலா ஆலோசனை:
இதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். 45 நிமிடம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாலையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
பேனர்கள் கிழிப்பு:
இதனிடையே ஜெயலலிதா, சசிகலா புகைப்படங்கள் அடங்கிய விளம்பர பேனர்கள் அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களில் சசிகலாவின் புகைப்படங்கள் மட்டும் கிழிக்கப்பட்டிருந்தன. கட்சி அலுவலக வாசலில் உள்ள பேனரிலும் சசிகலாவின் புகைப்படம் கிழிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.