பெங்களூர்: சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் வாலிபர்கள் இருவர் சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு எம்.ஜி. ரோடு பகுதியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, பல பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியதாக பிரபல ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
சீண்டல் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்களை அந்த நாளிதழ் வெளியிட முடியவில்லை என்றபோதிலும், போலீசாரிடம் ஓடிச் சென்று பெண்கள் புகார் கூறுவதை போன்ற படங்கள் வெளியானது.
மறுத்த போலீஸ்:
ஆனால் ஆதாரமோ அல்லது புகாரோ இல்லாமல் வழக்கு பதிவு செய்ய முடியாது என பெங்களூர் போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட் தெரிவித்துவிட்டார். புகார் இல்லாவிட்டாலும் கூட, ஆதாரம் வேண்டும் என்று காவல்துறை கூறி கைவிரித்தது. மீடியாக்கள் நெருக்கடியால் ஒருவழியாக எப்.ஐ.ஆர் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு சம்பவம்:
இந்நிலையில், கிழக்கு பெங்களூரிலுள்ள கம்மனஹள்ளி ஏரியாவின் 5வது மெயின் ரோட்டில், ஞாயிற்றுக்கிழமை இரவு 2.30 மணியளவில் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆட்டோவிலிருந்து இறங்கி ஒரு குறுக்கு சந்து வழியாக தனது வீட்டை நோக்கி நடந்து சென்ற இளம் பெண் ஒருவர் பலாத்கார முயற்சிக்கு உள்ளாகியுள்ளார்.
சிசிடிவியில் காட்சி:
இந்த காட்சிகள் அப்பகுதியில் ஒருவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. பேண்ட், சட்டை போன்ற ஆடை அணிந்த ஒரு பெண் நடந்து வருகிறார். அப்போது அவரை ஓவர்-டேக் செய்து ஒரு ஸ்கூட்டர் வந்து நிற்கிறது. அந்த ஸ்கூட்டரில் 2 ஆண்கள் அமர்ந்திருந்தனர்.
தப்பிக்க முயற்சி:
ஸ்கூட்டர் வந்து நின்ற வேகத்தை பார்த்ததும், ஏதோ நடக்கப்போகிறது என்று அந்த பெண்ணின் உள்ளுணர்வு சொல்லியிருக்க வேண்டும். உடனே தனது நடையின் வேகத்தை கூட்டியதோடு, சாலையின் ஒரு ஓரமாக செல்ல ஆரம்பிக்கிறார். ஆனால் ஸ்கூட்டரின் பின்னால் இருந்த ஆண், கீழே இறங்கி வந்து அந்த பெண்ணை வழிமறித்து நிறுத்துகிறார். அப்பெண் முயன்று பார்த்தும், அந்த ஆணின் முரட்டு பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.
காமவெறியாட்டம்:
இதையடுத்து அந்த ஆண் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். அவரது கைகள் முரட்டுத்தனமாக அந்த பெண்ணின் உடலில் படக்கூடாத இடங்களில் எல்லாம் படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், அந்த காமுகனின் கன்னத்தில் அறைகிறார். ஆனாலும், காமம் கண்ணை மறைத்த நிலையில் விடாமல் பெண்ணை பூ போல கசக்கி பிழிகிறார் அந்த நபர். இதன்பிறகு ஸ்கூட்டர் பக்கமாக தள்ளிக் கொண்டு, ஸ்கூட்டரின் முன்பகுதியில் அந்த பெண்ணை மல்லாக்க படுக்க வைத்து ஆடைகளை அவிழ்க்க பார்க்கிறார். அதற்கு ஸ்கூட்டரில் இருந்த அந்த காமுகனின் நண்பனும் உதவி செய்கிறார்.
தள்ளிவிட்ட கொடுமை:
தொடர்ந்து அந்த பெண் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், பலாத்காரம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்ட காமுகன், அந்த பெண்ணை இழுத்து, ரோட்டில் வேகமாக தள்ளிவிடுகிறார். அந்த பெண் தலை, உடலில் பல இடங்களில் அடி வேகமாக படுகிறது. இதனால் தடுமாறியபடி அவர் எழுகிறார். அவரை நிலைதடுமாற வைத்த அந்த இரு வாலிபர்களும், ஸ்கூட்டரில் வேகமாக தப்பி சென்றுவிட்டனர். இதில் கொடுமை என்னவென்றால் சற்று தூரத்தில் பைக்கில் சென்ற சில நபர்கள் இதை பார்த்தபடி நிற்பதுதான். அவர்கள் இந்த சம்பவத்தை தடுக்க முன்வரவில்லை. அச்சத்தாலா அல்லது பொறுப்பற்றதனத்தாலா அல்லது நடப்பது நண்பர்களிடையேயான வெறும் விளையாட்டு போலும் என சம்பவத்தை தவறாக கணித்ததாலா தெரியவில்லை.
காம கும்பல் அட்டகாசம்:
இந்த சம்பவம் பெங்களூர் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு இரவை குறி வைத்து நகரம் முழுக்க காமுக கும்பல் சுற்றி திரிந்திருப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. இதனிடையே சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து பெங்களூர் போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.