டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 7ம் தேதி முதல் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி தொடர்பான வழக்கு நடுவர் மன்றத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது என்றும் சுப்ரீம் கோர்ட் உறுதி அளித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது, 67 சதவீதம் வறட்சி தமிழகத்தில் நிலவி வருவதாக தமிழக அரசு சார்பில் வாதாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வினாடிக்கு 2000 கன அடி நீரை மறு உத்தரவு வரும் வரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
மேலும், பிப்ரவரி 7ம் தேதியில் இருந்து காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியது. வழக்கில் சம்மந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்தும் உரிய விளக்கங்களை தயாரித்து 3 வாரத்தில் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு மீண்டும் நடுவர் மன்ற விசாரணைக்கு அனுப்பப்பட மாட்டாது என்று காவிரி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உறுதி அளித்துள்ளது.