சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசுவதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம் என்றும் அவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது என்றார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தியிருப்போம் என்றும் அவர் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் ஸ்டாலினுக்கு பதில் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று அறிக்கை விடுத்துள்ளார். அதில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுக இருந்த போதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசுவதாகவும் சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் இயற்றக்கோரி மறைந்த முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடத்தியதை தெரிந்துக் கொண்டு ஸ்டாலின் பேச வேண்டும் என்றும் சசிகலா அறிவுறுத்தியுள்ளார். ஜெயலலிதா புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம் என்றும் ஸ்டாலினுக்கு சசிகலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.